Discover and read the best of Twitter Threads about #பிள்ளையார்

Most recents (4)

இன்று சனிக்கிழமை அல்லவா???? அதனால்...

ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்....

#கல்யாண_பத்திரிகை

நமஸ்காரம் / ஆசிர்வாதம் / உபயக்ஷேமம்

"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....

ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.

ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.

என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...

"வெரிகுட் ! வெரிகுட் !"
Read 17 tweets
#தமிழ்க்கடவுள்
#விநாயகர்
#பிள்ளையார்

"முருகன் தமிழ்க் கடவுள், ஆனால் பிள்ளையார் வடநாட்டுத் திணிப்பு" என்ற அறிவிலிப் பிரச்சாரம் செய்யும் திராவிட மற்றும் போலித் தமிழ் இயக்கங்களுக்கு,

பிள்ளையார் பெருமான் தமிழ்க் கடவுளே. ஆதாரங்களைப் பார்க்கலாமா?
@thirumaofficial
@SeemanOfficial +
"கைத்தல நிறைகனி" திருப்புகழ் பாடல் என்ன சொல்கிறது?

"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே"

அதாவது,
முத்தமிழின் பெருமையை மூத்த மலையாகிய மேருவில் முதலில் எழுதினாராம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான்!

எப்படி! தென்பொதிகைத் தமிழ் வடமேருவில், விநாயகரால்+
எழுதப்பெற்றது. இது எப்படி இருக்கு!

சரி, திருப்புகழ் ஆதாரம் பார்த்தோம். அடுத்து, தேவார ஆதாரங்கள்.

திருநாவுக்கரசர் தேவாரம்:
"சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" பாடலில்,

"பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்.." என்று வருகிறதே! +
Read 33 tweets
#பல்லியும் #காவியும். 👇
#பல்லி : கடவுள் இல்லை..! கடவுள் இல்லை..!! கடவுள் இல்லை..!!!
#காவி : இதை ஏன் மூணு தடவை கூவற..? உங்கப்பன் கோர்ட்ல டவாலி வேலை பார்த்தப்ப உன்னை பெத்தானா...?
பல்லி : ஹீம்.., நான் #பகுத்தறிவு நாத்திகன்...! நீ ஆத்திகன்..!! நான் கடவுள் இல்லைனு சொல்றேன்.
உன்னால முடிஞ்சா இருக்கார்னு சொல்லு பார்க்கலாம்...!!!
காவி : #கடவுள் இருக்கார்.
பல்லி : என்னால கடவுள் இல்லைன்னு #நிரூபிக்க முடியும்.
காவி : நிரூபி பார்க்கலாம்.
பல்லி : நீ இப்படி சொல்வேன்னு தெரியும். அதனால் தான் இந்த #பிள்ளையார் சிலையை வாங்கிட்டு வந்தேன். இதை உன் முன்னாலேயே
உடைச்சி கடவுள் இல்லைன்னு நிரூபிக்கிறேன்.

காவி : அப்படி நீ உடைச்சிட்டா, இந்த பிள்ளையாரை வச்சே கடவுள் இருக்கார்னு நான் நிரூபிக்கிறேன்.
( பல்லி பிள்ளையாரை உடைக்கிறது )
பல்லி : உடைச்சிட்டேன். இப்ப சொல்லு கடவுள் இருக்காரா...இல்லையா...?
காவி : உடைச்சிட்டியா...? எதை உடைச்ச?
Read 9 tweets
#நீள்பதிவு!

தமிழகக் குடைவரைகளில் #பிள்ளையார் சிற்பங்கள்:

தமிழ்நாட்டு குடைவரைகளில் காணக் கிடைக்கும் பழமையான #பிள்ளையார் சிற்பங்கள் #பல்லவர், #பாண்டியர், #முத்தரையர் அரச மரபினரால் உருவாக்கப்பட்டவை!
கணக்கற்ற குடைவரைகளைப் #பல்லவர்கள் அகழ்ந்திருந்த போதும் #பாண்டியர், #முத்தரையர் குடைவரைகளில் காணக் கிடைக்கும் #பிள்ளையார் சிற்பங்களின் எண்ணிக்கையில் ஏழில் ஒரு பங்கையே வட தமிழ் நாட்டுக் குடைவரைகளில் காண முடிகிறது!
#பல்லவர் பூமியில் அருகிக் காணப்படும் #பிள்ளையார், தென் தமிழ்நாட்டில் #பாண்டியர், #முத்தரையர் சீராட்டைப் பெற்றுச் செழித்தமை, அவர் தம் குடைவரைகளில் பரவலாகக் காணப்படும் #சிற்பங்கள் உணர்த்தும் உண்மையாகும்!
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!