Discover and read the best of Twitter Threads about #கதையளப்பு_களஞ்சியம்

Most recents (8)

#கதையளப்பு_களஞ்சியம்

இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.

இதுவும் எனது அனுபவமே

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
அந்த குடும்ப விழாவிற்கு Prof.Jayanthi அவர்கள் என் அண்ணிக்கு professional educational coordinator என்ற முறையில் அவரையும் வரச்சொன்னதால் அவரும் வந்திருந்தார்.

எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சிலர் Prof.Jayanthi அவர்களை பேசச் சொல்லி கேட்டார்கள்.
Read 21 tweets
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்.....

#வீட்ல_சும்மா_தானே_இருக்கா???

ருக்கு... காய்கறிகள் வாங்கி கொடுத்தது பத்து மணிக்கு ... இப்ப மணி 1ஆறது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே!
சமைக்குறது அவ்ளோ ஈசியா?! ஒருநாளைக்கு சமைச்சு பாரு அப்ப தெரியும் எங்க கஷ்டம்..

அடியேய்! (#எங்களுக்கும்_கோபம்_வரும்ல!!!) ஹோட்டலிலும், கல்யாண மண்டபத்திலும் 500, 1000 பேர்ன்னு விதம் விதமா சமைக்குற சமையல் மாஸ்டர்கூட இம்புட்டு சலிச்சுக்க மாட்டாங்கடி..
ஒரு டம்ளர் அரிசி போட்டு சோறு பொங்க இப்படி சலிச்சுக்கிட்டு அதையே சொல்லி சொல்லி காட்டுறீங்கடி இந்த பொம்பளைங்க...

யோவ்! (என்னம்மா இது.... பொசுக்குன்னு #யோவ்னு சொல்லிட்ட.... அது நம்ப ஃபிரண்டு @anexcommie நம்பள சொல்றதும்மா...
Read 23 tweets
சீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#குருநாதரும்_சிஷ்யகேடியும்

இந்த பதிவு முற்றிலும் கற்பனையே

கதையின் முடிவில் இந்த கதாபாத்திரங்கள் யாரென்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
குருவுக்கும் கேடிக்கும் என்ன உறவு என்று கண்டு பிடிப்பதைவிட, பால் பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லைக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சுலபம்

அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை குரு-கேடி ரெண்டு பேரோடையும் பேசுவதற்கு அனுப்பினால்....
சத்தியமா இருவரும் உறவுதான் என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார்.

ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம். சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன ரெண்டு சாத்துக்குடி பழங்களுடனும் வாசலில் வந்து நின்ன குருவைப் பார்த்துப் பூரித்த
Read 32 tweets
அடடே.... இன்னிக்கு வெள்ளிக்கிழமை அல்லவா....

ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும் .....

#நீளமான_சிறுகதை

#தமிழக_அபார்ட்மெண்ட்_பெரிசுகள்

நம்ப குரூப்ல இங்க எல்லோரும் இப்போ ஒரே apartment complexல இருந்தா எப்படி இருக்கும்... ஒரு #சின்ன_கற்பனை....
[இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நம்மவர்கள் பெயர்களை மட்டும் உபயோகப்படுத்தி உள்ளேன். மற்றபடி.... நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனையே.... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.... தவறாக நினைக்காதீர்கள்... தவறு என்றால் மன்னிக்கவும்]
ராயப்பேட்டைலேந்து towards south போனால்.... லஸ் சிக்னல்... அதுல ரைட்ல திரும்பி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் போய்.... நாகேஸ்வர ராவ் பார்க்குக்கு எதிரே பழமுதிர் நிலையத்துக்கும் தளிகை எனும் ரெஸ்ட்டாரண்ட்டுக்கும் இடையே உள்ள சின்ன ரோட்டில் போனால்.... அதுதான் கென்னடி முதல் தெரு....
Read 37 tweets
இன்று சனிக்கிழமை அல்லவா???? அதனால்...

ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்....

#கல்யாண_பத்திரிகை

நமஸ்காரம் / ஆசிர்வாதம் / உபயக்ஷேமம்

"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....

ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.

ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.

என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...

"வெரிகுட் ! வெரிகுட் !"
Read 17 tweets
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#Encoding_மய்யநாயகன்

youtube.com/shorts/y5PABay…

#சேப்பாக்கம்_கமுதி_ஆய்வுக்கூடம் பதட்டத்தின் உச்சியில்.

அத்தனை விஞ்ஞானிகளும் வேர்க்க விறுவிறுக்க ஆலோசனை செய்து கொண்டு இருந்தனர்

காரணம கிராவிட கிரகசாரத்தின் குன்றிய தேசியத் தாக்குதல் தான்
கான்ஃபிரன்ஸின் ஹாலில் நடுநாயகமாக மிகுந்த சோர்வுடன் அமர்ந்து இருந்தார் #நதியாஉதி.

தலைமை விஞ்ஞானி #ஆர்ப்பிட்டியார் தொண்டையை செருமிக் கொண்டு, "நன்பர்களே(?!) இப்போது #யமில்நாடு இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது.
கிராவிட கிரகசாரம் நம்ப யமில்நாட்டை கைப்பற்ற வருகிறார்கள். நமது ஒன்றிய நாட்டில் நமது யமில்நாட்டை குறி வைத்திருக்கிறார்கள்.

நம்மைவிட அவர்கள் 380 கேடிகள்(?!) செலவு செய்து ஐடி அட்மினை ஸ்ட்ராங்காக வைத்து இருக்கிறார்கள். அவர்களை வெல்வது எளிதான காரியம் அல்ல.
Read 29 tweets
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்....

#கும்பலோடு_கோவிந்தா!!! (ஆன்மீக பதிவு #இல்லை)

இது பள்ளிக் கால அட்டகாசம்

தினமும் morning assembly முடியும் சமயம் நிறைவாக தேசிய கீதம் பாட வேண்டும்.

பாதி பேருக்கு வல்லின மெல்லின பிரயோகங்களில் இடியாப்ப சிக்கல்.
ஆனாலும் கோவில் மணி அடிப்பது போல் வாய் மணக்க #ஜன_கன_மன' என்று ஆரம்பித்து #பாரத_பாக்ய_விதாதா' என்பதை ‘பாரதி பார்கவி தாத்தா‘ என்று கன கம்பீரமாய் பாடும் ஜோர் இருக்கு பாருங்கள்…வீர ரசம் ததும்பும்!

மீதி பேர் நமக்கேன் வம்பு என்று வெறும் வாயை மட்டும் அசைப்பார்கள்.
ஆனால் சும்மா சொல்லக் கூடாது. சிவாஜி கணேசன் rangeக்கு வாய் அசைப்பார்கள். அப்பொழுதுதான் பழி தீர்க்கறாப்பல டீச்சர் பக்கத்தில் வந்து காதை தீட்டிக்கொண்டு நிற்பார்... "நீ நிஜமாகவே பாடறயா இல்ல சும்மா பாவ்லா காட்றயா" என்று தீர்மானிக்க.
Read 13 tweets
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#கதை_சொல்வது_எழுதுவது_எப்படி???? வரிசையில் இன்று...

#ருசிகர_ருக்மணி

தெரியாத்தனமாக நான் ட்விட்டரில் இருப்பதையும் நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே....
என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் என் பாரியாள்ட்ட சொல்லிட்டேன்.

அவுங்க பேரு ருக்மணி! எங்க குடும்பத்தில் அவங்களை எல்லாரும் #ருசிகர_ருக்மணி ன்னு தான் கூப்பிடுவாங்க
சீனி உன்னோட பதிவுகள் எல்லாம் ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓகே ரகம்தான் என்று சொல்லிவிட்டு ரொம்ப யோசனையில் இருந்தாள்....
Read 31 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!