Discover and read the best of Twitter Threads about #ஶ்ரீவைஷ்ணவம்

Most recents (9)

#சரணாகதி_வைபவம் #ஶ்ரீவைஷ்ணவம்
(ஸ்ரீ உ.வே. D.S.தாதாசார்ய ஸ்வாமி வைகுண்டவாசி)
சரணாகதியால் நமக்கு ஏற்படும் பலம் என்ன?
சரணாகதியால் நாம் #க்ருதக்ருத்யர் ஆகிறோம். அதாவது, மோக்ஷத்திற்காக நாம் செய்யவேண்டிய கார்யம் செய்தாய்விட்டது. நமக்கு மோக்ஷம் நிச்சயம். நம்முடைய கர்மம் எப்படி என்றால், Image
ப்ரஹ்ம கல்பத்தில் 10,000 கல்பம் ஜன்மம் எடுத்து நம்முடைய கர்ம பலத்தை அனுபவித்தாலும் முடிவு பெறாத கர்மத்தை ஒருவன் அரை க்ஷணத்தில் செய்து விடுகிறான். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கர்மா? ஒரு நாளில் எவ்வளவு? ஒரு வருஷத்தில் எவ்வளவு? ஒரு ஆயுசில் எவ்வளவு? இப்படி எத்தனை ஜன்மம்
நாம் எடுத்திருக்கிறோம்? இக் கர்மத்துக்கு #ஸஞ்சித_கர்மம் என்று பெயர். இவைகளுக்குப் பெருமாள் பேரேடு போட்டு வைத்திருக்கிறார். இதில் ஒவ்வொரு கர்மமாக எடுத்து நமக்குப் பெருமாள் பலம் கொடுக்கிறார். அப்படிப் பலம் கொடுப்பதற்காக எடுத்திருக்கிற கர்மத்துக்கு ஐந்து ஜன்மம் அனுபவிக்க வேண்டி
Read 8 tweets
#ஶ்ரீவைஷ்ணவம் #மகாபாரதம் #கண்ணன்
கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள். பூரணகும்பம் கொண்டு வரவேற்பு. பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான். கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!கண்ணன் கேட்கிறான், "பச்சை வர்ணம் பூசப்
பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே, அது யாருடைய வீடு?”
“அச்சுதா அது என்னுடைய வீடு" என்கிறார் துரோணர்.
கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''
கண்ணன்: "மஞ்சள்
வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா அது என்னுடைய வீடு''
கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப்
Read 6 tweets
#ஶ்ரீவைஷ்ணவம்
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் பத்துவிதமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
அவை:
1. அத்வேஷி.
2. அனுகூலன்
3. நாமதாரி
4. சக்ராங்கி
5. மந்திரபாடி
6. வைஷ்ணவன்
7. ஸ்ரீ வைஷ்ணவன்
8. ப்ரபந்நன்
9. ஏகாந்தி
10. பரம ஏகாந்தி

#அத்வேஷி
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும்
துவேஷம் (வெறுப்பு) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி
#அனுகூலன்
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்து கொள்வது, பெருமாள் கோவிலுக்கு செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களை போற்றுவது, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது
இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன்.
#நாமதாரி
முன்சொன்ன குணங்களோடு மஹா விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்து இருப்பவன்.
#சக்ராங்கி
மேலே சொன்ன மூன்றோடு, வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹா விஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்கர சின்னங்களை ஆசார்யன்
Read 18 tweets
#அனந்தன் #அனந்தாழ்வார் #ஶ்ரீராமானுஜர் #ஶ்ரீவைஷ்ணவம்
ஆயிரம் வருடம் முன்பு, மலை வாழ்வு கடினம். தொற்றுநோய், காட்டு விலங்குகள் பயத்தால், திருப்பதி மலையில் வசித்தவர்கள் மிகக் குறைவு. ஒரு நாள் இராமானுஜர் தமது சீடர்களை அழைத்து அவர்களில் யாரால் தினந்தோறும் திருப்பதி பெருமாளுக்கு சேவை
செய்ய அந்த ஊருக்குச் செல்ல முடியுமா எனக் கேட்டார். அப்போது அனந்தன் எழுந்து, இந்த அடியேன் திருப்பதி பெருமாளுக்கு தினந்தோறும் சேவை செய்வதற்கு அருள் புரியுங்கள். உங்கள் கருணையினால் நான் இந்த சேவையை இன்முகத்துடன் ஏற்கிறேன், எனத் தெரிவித்தார். குருவின் கட்டளையை ஏற்ற உண்மையான ஆண்பிள்ளை
என இராமானுஜர் அங்கு கூடியிருந்த வைஷ்ணவ பக்தர்களிடம் அனந்தனின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். அனந்தாழ்வாரும் திருப்பதி மலைக்குச் சென்று, நந்தவனம், குளம் போன்றவற்றை உருவாக்கி பொது மக்களின் தரிசனத்திற்கான வசதிகளை உருவாக்கிக் கொடுத்தார். பக்தித் தொண்டின் முக்கிய கோட்பாடுகளில்
Read 6 tweets
#அரங்கன் #பராசர_பட்டர் #ஶ்ரீவைஷ்ணவம் #தமிழ்
பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார்.
‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க,
‘முதலில், உம் ஆதிசேஷனைப் போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றார் பராசரர்.
‘அட! ஆயிரம்
நாக்குகள் இருந்தால் தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான். ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர்
”மன்னிக்கவும் ரங்கா! என்னால் உன்னை பாட முடியாது!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகி
விட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே, பாடு என்று உத்தரவு போட்டாகி விட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகி விட்டது. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால்?
”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய், கொடுத்தேன். பிறகென்ன பாட
Read 10 tweets
#தூயபக்தி #ஶ்ரீராமானுஜர் #அரங்கன் #சலவைத்_தொழிலாளி #ஶ்ரீவைஷ்ணவம் #விசிஷ்டாத்வைதம்
உண்மையான பக்தர்கள் மற்றவர்களை பற்றித்தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள். ஒரு சமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த
உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்ட போது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். “அப்படியே செய்” எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவை தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும்
Read 7 tweets
#எழுத்தாளர்_சுஜாதா தான் எழுதினாரா என்று தெரியவில்லை ஆனால் வாட்சப்பில் வந்தது, அவர் எழுத்து சாயலில் உள்ளது. அருமையான அலசல! #ஶ்ரீவைஷ்ணவம் #பகுத்தறிவு

சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும்
பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.” இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு சொல்கிறார் என்று தோன்றும்.
“நீ ஏதோ டபாய்க்கிற” என்பேன்
“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை
எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்” என்பார். அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும் போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக் கொள்ளச் சொல்ல மாட்டார். அவர் வேண்டிக் கொள்ளச் சொல்லுவது, நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ என்பார். இவை
Read 21 tweets
#ஶ்ரீவைஷ்ணவம் #திருப்பாணாழ்வார் #அமலனாதிபிரான்
கார்த்திகை, ரோஹிணீ - 08.12.2022
திருப்பாணாழ்வார் திருநக்ஷத்திரம்
கார்த்திகை ரோஹிணீ - நீளாதேவி அவதரித்த உறந்தை என்னும் உறையூரில் திருமாலின் ஶ்ரீவஸ்தம் என்னும் மறுவின் அம்சமாய் அவதரித்த திருப்பாணாழ்வார் திருநக்ஷத்ரம்! பிறப்பால் பாணராக
இருந்தாலும், இவரது பண் மற்றும் பக்தி பெருக்கால் இவரை ஆட்கொண்டான் அரங்கன். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் தன்னுடைய கால் ஷேத்ரமண்ணில் படக் கூடாது என்பதில் வைராக்யமாக இருந்த பாணர், தினமும் காவிரிக் கரையினில் நின்று கையில் யாழுடன் அரங்கனை சேவித்து மெய்மறந்து பாடிக் கொண்டு இருப்பார்.
ஒரு நாள் அரங்கனின் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டு செல்ல பொற்குடத்துடன் காவிரிக்கு வந்த பட்டர் லோகசாரங்கர், வழியை மறைத்து தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த பாணரை விலகும்படி சொல்ல, அது அவர் செவியில் ஏறவில்லை. கோபமுற்ற லோகசாரங்கர் ஒரு கல்லெடுத்து வீச, அது பாணரின் நெற்றியில் பட்டு,
Read 8 tweets
#ஶ்ரீவைஷ்ணவம் ஸ்ரீரங்க ஷேத்திரத்தில் #பராசர_பட்டர் என்கிற ஆச்சார்யார் இருந்தார். (இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகன்) ரெங்கநாத புரோஹிதர் அவர். சஹஸ்ரநாமத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்ற பாஷ்யம் எழுதியிருக்கிறார். பகவானுடைய கல்யாண குணங்களைக் காட்ட கூடிய கண்ணாடி
அது. ஸ்ரீரங்கத்திலேஇருக்கும் போது சிஷ்யர்களுக்கல்லாம் பாடம் சொல்லி கொடுப்பது வழக்கம். அவ்வாறு சொல்லுகிறபோது, ஒரு பெரிய வித்வான் வீதி வழியே போவார். அந்த வித்வான் போனால் பராசர பட்டர் ஏறடுத்தும் பார்க்கமாட்டார். விசாரிக்க கூட மாட்டார். அவர் போன சிறுது நேரத்துக்கெல்லாம், ஒரு பெரிய
செப்புச் சொம்பை நன்றாக பள பளவேன்று தேய்த்து எடுத்துக் கொண்டு, உஞ்சவிருத்தி பிராமணர் ஒருத்தர் வருவார். அரை குறையாக ஒரு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு வீதியோடு போவார். ஸ்லோகத்தையும் தப்பாகச் சொல்லுவார். பாத்திரம் ரொம்பும் அளவுக்கு வீதியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்.ஒன்றும்
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!