Discover and read the best of Twitter Threads about #சைவம்

Most recents (7)

1/ @HinduismToday அமெரிக்காவில் ஹவாய் மாநிலத்தில் உள்ள Kauai ஊரில் சிவபெருமானுக்கு கல்லால் கோவில் கட்டப்பட்டுள்ளது .இக்கோவிலை Kauai's Hindu Monastery துறவிகள் கட்டி உள்ளனர்.
இக்கோவிலின் பெயர் "இறைவன் கோவில்".

himalayanacademy.com
@HinduismToday 2/ இத்திருப்பணி சுமார் 33 ஆண்டுகள் நடைபெற்று வருகிற ஞாயிற்றுக் கிழமை மார்ச் 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோவிலுக்கு ஆன கல் மண்டபங்கள் , தூண்கள் , சிற்பங்கள் பெங்களூர் சிற்ப சாலையில் செய்யப்பட்டு அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டது .

@HinduismToday 3/ ஹவாய் தீவு சுனாமி மற்றும் எரிமலை பாதிப்பு உள்ள பகுதி என்பதால் இக்கோவிலை கல்லால் கட்டி உள்ளனர்.

சற்குரு சிவாய சுப்பிரமணிய ஸ்வாமிகள் Kauai's Hindu Monastery என்கிற ஹிந்து மத ஸ்தாபனத்தை Kauai தீவில் நிறுவினார்.
Read 9 tweets
1/ மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது

திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #சைவம்
2/
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
3/
i. அஞ்சிலே ஒன்று பெற்றான் --> பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று தன்மையான வாயு தேவரின் மைந்தன் அனுமன்
ii. அஞ்சிலே ஒன்றைத் தாவி --> பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தன்மையான பெருங்கடலை தாண்டினார் அனுமன்
Read 5 tweets
#சைவம் #வைணவம் #ஹிந்துமதம்
#மகாபெரியவா காஞ்சிக்கு பக்கத்தில் கீழம்பி என்ற கிராமம். பெரியவா வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரோடு பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யாரும் நடந்து வந்தார். அவர் பெரிய வைஷ்ணவ தலைவர். வைஷ்ணவ சம்பிரதாயங்களை துளிகூட குறைவில்லாமல்
அனுஷ்டிப்பவர். எல்லாவற்றுக்கும் மேல், பெரியவாளிடம் ஹிமாயலய பக்தி! வரப்பின் மேல் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டு இருந்த போது, அண்ணா ஸ்வாமி கைகளைக் கூப்பிக் கொண்டு “தேவரீர், ஒரு நிமிஷம் அப்பிடியே நிக்கணும்” என்று வேண்டினார். பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு கணிகண்ணன் பின்னால் போன
ஜகன்னாதன் பக்தரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்ற அப்படியே நின்றார். வரப்பை ஒட்டி வாய்க்காலுக்கு போய்க் கொண்டிருந்த ஜலத்தை, இரு கைகளாலும் அள்ளி பெரியவாளின் திருப்பாதங்களில் வார்த்தார். கொஞ்சம் கூட அசையாமல் நின்றார் பெரியவா. பாத தீர்த்தத்தை எடுத்து தன் தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டு
Read 6 tweets
சிலர் தமிழிலும் கேட்பதால், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பதிவு. #சைவம் #சிவச்சின்னங்கள்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு #அன்னாபிஷேகம் நடக்கும் காலம் ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்
#தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
#திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் #திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் #பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன்
மீது பாடியவர் #திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் #திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது #துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது #கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்
Read 16 tweets
@VadhavooranT @MSivaRajan7 @Dharmicking @kgkicha @Somuthesanatani @amgeminigirl @Mkumaran21 @TruthAlone2 @ShanmuSundarS @Ramsamri கந்தபுராணம் சொற்பொழிவு பாகம்-2
மிக்க நன்றி @VadhavooranT
"முருகன் திரு அவதாரம் நிகழ்ச்சி"
drive.google.com/file/d/17BL4T1…
திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #கந்தபுராணம்
@Ramsamri @MSivaRajan7 @kgkicha @ShanmuSundarS @TruthAlone2 @amgeminigirl @Somuthesanatani Image
கந்தபுராணம் சொற்பொழிவு பாகம்-3
மிக்க நன்றி @VadhavooranT
drive.google.com/file/d/1Fzbw4C…
திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #கந்தபுராணம்
Read 9 tweets
இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை
#சைவம்
#சாக்தம்
#வைஷ்ணவம்
#காணாபத்யம்
#கெளமாரம்
#செளரம்
#ஸ்மார்த்தம்
சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவனின் பாடல் பெற்ற கோவில்கள் 284ல் 274 தமிழ்நாட்டில் உள்ளன.
வைணவத்தின் 108 திவ்ய தேசத் தலங்களில் 84 தமிழ்நாட்டில்தான் உள்ளன.
கெளமாரத்தின் 21
#முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
கானாபத்தியத்தில் அஷ்ட #கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான்!
செளரத்தில் சூரியனை தெய்வமாக #தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்.
சாக்தத்தில் #பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்
அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு
தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும் ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான் .
#பதிணெட்டு_சித்தர்கள் தோன்றி வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான்.
Read 6 tweets
#ஆகமம்
#சைவம்

சில காலமாகச் சிலர் இவ்வாறெல்லாம் சொல்லி வருகிறார்கள்:

"சைவம் வேறு, சனாதன தர்மம் வேறு.

வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை.

குடமுழுக்கு தமிழில் தான் நடத்தப்பட வேண்டும்.

சமஸ்கிருதம் எதற்கு?"

இவற்றில் உண்மையோ சைவம் சம்பந்தப் பட்ட விஷய அறிவோ இல்லை.+
முதலில் - சைவம், வை(ஷ்)ணவம், சாக்தம், கௌமாரம் முதலிய பெயர்கள் சமஸ்கிருதம் தான்.

சரி, தமிழ்ச் சைவ முதல்வர்கள் யார்? சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் பாடல்களில் மேலோட்டமான பரிச்சயம் இருந்தாலும் மேற்கண்ட கூற்றுகள் தவிடுபொடி ஆகிவிடும்.+
திருஞானசம்பந்தர் தேவாரம் எங்கணும் வேதம், வேள்விகள், அந்தணர் சிறப்புகள் விரவியுள்ளன.

எ.கா:

"அருநெறிய மறைவல்ல முனி" (அதாவது, சிவபெருமான் அரிய வேதங்களில் வல்லவர்)

"வேதத்தில் உள்ளது நீறு"

"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே"+
Read 32 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!