Discover and read the best of Twitter Threads about #மகாபெரியவா

Most recents (24)

#மகாபெரியவா
இந்த சம்பவத்தை சொன்னவர் பெயர் விவரம் தெரியவில்லை.

மகாபெரியவாள் எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தி இருக்கிறார். சாதாரண நிகழ்வு போலவே அற்புதங்கள் நிகழ்த்தும் கருணா மூர்த்தி அவர். சென்னையில் வசித்து வந்த ஒரு பெண்மணி ஒரு விபத்தில் தன் கணவர் மகன் மருமகள் மூவரையும் இழந்து Image
பேரன் ஒருவனுக்காகவே வாழ்ந்து வந்தார். பணத்திற்குக் குறைவில்லை. இன்ஷ்யூரன்ஸும் நிறையவே கிடைத்தது. பாங்கில் போட்டு விட்டு கிடைத்த வட்டியில் நன்றாகவே வாழ முடிந்தது. மகா பெரியவாளின் பக்தையான அவர் அடிக்கடி காஞ்சீபுரம் வந்து தரிசித்துப் போவார். பேரன் பள்ளிப் படிப்பு வரை நன்றாகப்
படித்து நல்ல மார்க்குடன் தேறி காலேஜ் சேர்ந்தான். காலேஜில் கெட்ட சகவாசத்தில் புகை மதுப் பழக்கங்கள் வந்தன. பாட்டி கண்டிக்க ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப் போனான். பாட்டி அழுதழுது பேப்பரில் எல்லாம் விளம்பரம் செய்து பார்த்தாள். பேரன் திரும்பி வரவே இல்லை.
காஞ்சிபுரத்திற்கே குடி வந்தாள்.
Read 8 tweets
#மகாபெரியவா அருள்வாக்கு
பசுவின் சாணம்/மலமும் பவித்திரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும். சாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களின் #பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே Image
சாயங்காலத்தில் பசுக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ணிய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது.
கோமாதா,
பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள். புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்ணிய ஸ்நானமாக இருக்கிறது! அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில்
Read 5 tweets
#மகாபெரியவா அருள்வாக்கு
பெயருக்கு தொண்டு செய்தால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணியதாகத் தான் அர்த்தம்.
சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் ஆடம்பரமாக இல்லாமல் கணக்காயிருப்பது சிக்கனம். சிக்கனம் செய்யும் பணம் தர்மம் செய்வதற்கு உதவும்.
பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் Image
திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து, எளிமையாக இருக்க வேண்டும்.
நம் தவறுகளைக் கழுவிக் கொள்ள ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அழவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம், இந்த நிலையில் பிறருடைய தவறுகளை கண்டுபிடித்து கோபிப்பதில் நியாயம் இல்லை.
ஒருவரிடம்
எத்தனை தவறுகள் இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாதே. சிறிய நல்ல விஷயம் இருந்தால் அதனை கொண்டாட வேண்டும்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு அதிக பாக்கியங்கள் உள்ளது. அனைத்து பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதாகும். - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
Read 4 tweets
#மகாபெரியவா
பி.சுவாமிநாதன் எழுதிய மகாபெரியவர் என்ற புத்தகத்தில் இருந்து, அவர் அனுமதியுடன் தட்டச்சு செயதது-வரகூரான்.

கொஞ்சம் பழைய சம்பவம் இது. காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும். சதஸ் என்பார்கள். மகா பெரியவாள் நடு Image
நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள், வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில் கலந்து கொள்வார்கள். இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு
விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே ஆரம்பித்து வைத்திருந்தார். அது ஒரு வெள்ளிக்கிழமை. வழக்கம் போல
Read 28 tweets
#மகாபெரியவா
சங்கராம்ருதம் - 536
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

இளம் வயதுப் பையன். பழத்தட்டுடன் வந்து பவ்யமா நமஸ்காரம் செய்தான் பெரியவாளுக்கு.
"நீங்கதான் என்னோட குரு" என்றான்.

“ரொம்பப் பேர், அப்படி சொல்லிண்டிருக்கா!"

உதடு பிரியாத Image
புன்னகையுடன் பெரியவா.

"நான் அப்படியில்லே. உங்களைக் குருவாக வரித்து விட்டேன். எனக்கு ஸ்ரீ வித்யா ஷோடசி மந்த்ரம் உபதேசம் பண்ணணும். என்னைப் பரம சாக்தனாக ஆக்கணும். ஜான் வுட்ராஃபின் தந்திர நூல்களை எல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். Serpent Power எனக்கு நெட்டுருவே ஆயிடுத்து”

பெரியவாள்,
நிதானமாகக் கேட்டார்கள் "நீ இப்போ என்ன சாதனை பண்ணிண்டிருக்கே?"

"லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சௌந்தர்யலஹரி, மூக பஞ்சசதி, ஆனந்த ஸாகர ஸ்தவம்,சியாமளா தண்டகம்”

"இதுபோறும்.அம்பாளைத் தியானம் செய்” -பெரியவா

பையனுக்கு எரிச்சலாக வந்தது. சாக்தத்தில், தான் இவ்வளவு ஊறி இருந்தும் பெரியவா,
Read 9 tweets
#மகாபெரியவா அருள்வாக்கு
கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அதுபோல் நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், Image
தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி துக்கம் லேசாகிவிடும்.
நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.
வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத
Read 4 tweets
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
புத்தகம்-பெரியவா பெரியவாதான்.

மகா பெரியவாளின் அனுக்ரகத்துக்கு உள்ளான ஒரு பெண்மணி பெயர் சுந்தா சுந்தரம். காஞ்சிப் பெரியவா மீது அப்படி ஒரு பக்தி. காஞ்சி சென்று மகா ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று, அந்த ஆனந்த Image
வெள்ளத்தில் திளைப்பார். எப்போது காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றாலும், ஒரு கூடை ரோஜா மலர்களைக் கொண்டு செல்வது அவர் வழக்கம். அன்றைய தினம், சுந்தா சுந்தரத்துடன் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாட்டியும் சென்றிருந்தார். மகா பெரியவாளைத் தரிசிக்கும்
போது, வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக, குசேலர் அவல் கொண்டு போன மாதிரி, ஒரு சீதாப்பழத்தை எடுத்து வைத்திருந்தார். மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். ஆளாளுக்குக் கையில் ஒரு மூங்கில் தட்டில் ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் என்று விதம்
Read 16 tweets
#மகாபெரியவா
சொன்னவர்-சந்திரசேகர சர்மா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு: வரகூரான் நாராயணன்.
நன்றி: குமுதம் லைஃப்

காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி இருந்த முகாமிற்கு பால்காரர் தினமும் பால் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மனிதருக்கு பெரியவா யார், அவரை வணங்கி எழ வேண்டும் Image
என்பதெல்லாம் தெரியாது. ஏனெனில் அவர் மராட்டியர். யாருக்கு பால் கொண்டு போய் தருகிறோம் என்று தெரியாமலே கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் ஒரு நாள், அந்தப் பால்காரரின் மனைவிக்கு திடீரென்று உடல்நிலை கெட்டுவிட, அடுத்தடுத்த நாட்களில் ஆரோக்கியம் வெகுவாகக் குறையத் தொடங்கியது.
வீட்டில் சகல காரியங்களையும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண் ஒரே வாரத்தில் நிற்க முடியாமல், நடக்க முடியாமலும் தடுமாற, உடலின் இயக்கம் சுத்தமாகக் குறைந்து, படுத்த படுக்கையாகிவிட்ட நிலை. பால்காரர் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் நன்றாகப் பரிசோதித்த
Read 14 tweets
#மகாபெரியவா அருள்வாக்கு
அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் கிடைக்கும்.
வாழ்வை எளிதாக்கிக் கொண்டால், அடிப்படை பொருள்களைக் கூட தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
நமக்கு உணவு தருபவனுக்கு நல்ல உணவும், நமக்கு உடை தருபவனுக்கு நல்ல உடையும் கொடுக்கத் தவறி Image
விட்டோம். நமது ஊர் கோயில் சுவாமியின் ஆடை, சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
இறைவனை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பயன் கிடைக்கும், அறியாமல் செய்தால்கூட பலன் உண்டு.
பொருளை பெருக்கிக் கொள்வதால் வாழ்க்கைத் தரம்
உயர்ந்து விடாது. தரமான வாழ்க்கை மனநிறைவில் தான் கிடைக்கிறது.
மனிதன் கடந்த காலத்தில் நடந்ததற்கு பரிகாரம் தேடுவதைவிடப், புதிய சுமை சேராமலும், பாவம் செய்யாமலும் வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியமாகும். -ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய
Read 4 tweets
#மகாபெரியவா
ஒரு பக்தரின் அனுபவங்கள்

வழக்கம்போல அந்த ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பர் கோபுவும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த Image
மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்த பொழுது அந்த மஹான் 2 வெளி நாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர்
தரிசனத்திற்காக காத்துக் கொண்டு இருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை. அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே
Read 25 tweets
#மகாபெரியவா
ஒருமுறை காஞ்சிப் பெரியவா மயிலாப்பூர் வந்த போது, "மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா" என்று சீடர்களிடம் விசாரித்தார். அது காலை நேரம். வீட்டில் தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில் இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்துவிட்டார். மணி Image
அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. மகா பெரியவாளை பக்தியுடன் வரவேற்றார்.

"ம்....பாடு!" என்றார் மகா பெரியவா.

"நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை, பெரியவா!"
என்றார் மணி அய்யர்.

"நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன். குளிக்காவிட்டாலும் பரவாயில்லை.. பாடலாம்!" என்றார்.
"மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா" என்று இழுத்தார் மணி அய்யர்.

"நான் தாளம் போடுகிறேன், நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்து விட்டார் மகா பெரியவா.

வேறு வழி இல்லை. காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்யர்.
Read 4 tweets
#மகாபெரியவா
நீங்கள் பலமுறை இந்த சம்பவத்தைப் பற்றி படித்திருப்பீர்கள், இது பற்றி தெரியாதவர்களுக்காக இன்னும் ஒரு முறை.
சென்னையைச் சேர்ந்த திருமதி கலா மூர்த்தி பகிர்ந்தது:
ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து Image
என்ன ரொம்ப வலிக்கிறதா? என்று கருணையுடன் கேட்டார். பிறகு, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.
அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி
வாதாலய வாஸ விஷ்ணோ
- ஸ்ரீமத் நாராயணீயம்
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும்
Read 5 tweets
#மகாபெரியவா
பாகவத ஸப்தாகம், நவாகம் என்றாலே பல பக்தர்களுக்கு மாயவரம் #சிவராமக்ருஷ்ண_சாஸ்த்ரிகள் தான் நினைவிற்கு வருவார். அப்படி ஒரு அருமையான ப்ரவசன மேதை! ப்ரவாகமாக ஸ்லோகங்களும் மேற்கோள்களும் வர்ஷிப்பார். கேட்டது போதும் என்று யாருக்குமே தோன்றாது. மெய் மறந்து கேட்கும் கூட்டம். Image
அப்படிப்பட்ட பண்டிதருக்கு திடீரென்று சரீர அசக்தி உண்டாகி, மனதிலும் மறதி இடம் பிடித்ததால், ப்ரவாகமாக வரும் பேச்சு தடைபட்டது. குடும்பமே கலங்கியது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை! என்று வேறு எங்கு போவார்கள்? பெரியவாளின் தரிசனத்துக்கு வந்து கதறி அழுதார்கள். சாஸ்த்ரிகளும் பேச்சு
வராவிட்டாலும், கண்களில் வழிந்த கண்ணீரால் தன் இயலாமையை கூறினார். சாதரணமாக நம்மைப் போல வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோர்க்கு, வாக்கு தடைபட்டால் "நல்லதாப் போச்சு!" என்று நம் குடும்பத்தாரே நினைப்பார்கள். ஆனால், சாஸ்த்ரிகளோ, பகவத் குணங்களை வர்ஷிப்பது தடைபட்டதே என்று உருகினார். அவருடைய
Read 10 tweets
#மகாபெரியவா அருள்வாக்கு

கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அது போல நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், Image
தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி துக்கம் லேசாகிவிடும்.

நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்
வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத
Read 4 tweets
#மகாபெரியவா
"நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’ ‘தண்டனிடுவது’ என்றுதான் சொல்வதென்றாலும் அங்கே அர்த்தமே வேறே. தண்டம் என்பது அங்கேயும் கழிதான். ஆனால் அஸல் கழியை இல்லாமல், அதை உபமித்து [உவமித்து] ‘தண்டனிடுவது’ என்று வந்திருக்கிறது. கழியை நிறுத்திப் பிடித்தால் Image
அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. ‘கழியாட்டம் விறைச்சுண்டு நிக்கறயே!’ என்று பணிவு இல்லாதவர்களைக் கேட்கிறோம். அதே கழி பிடியை விட்டு விட்டால் ஒரே படிமானமாக பூமியோடு பூமி படிந்து அப்படியே கிடக்கிறது.  ஜீவ மனஸ் பொதுவாகக் கழி மாதிரி விறைத்துக் கொண்டு நிற்பதுதான்.
அஹம்பாவப் பிடிப்பில் அது அப்படி இருக்கிறது – அஹம்பாவம் அதைப் பிடித்துக் கொண்டு உசத்தி கொண்டாடிக் கொண்டு நிறுத்தியிருப்பதில்! அந்த அஹம்பாவப் பிடிப்பை விட்டு விட்டால் மனஸ் தாழ்மையாகக் கிடக்கும். அப்படிக் கிடந்தே நிஜமாக உசந்ததில் உசந்த ஸெளக்யத்தைப் பெற்று விடும். இந்த மாதிரி மனஸைக்
Read 15 tweets
#மகாபெரியவா
கும்பகோணம் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் கூறியது.
ஸ்ரீ மஹாபெரியவா சிவாஸ்தானத்தில் அருள் செய்து கொண்டிருந்த சமயம். 12 வயது சிறுவன் கருணாமூர்த்தியிடம் அடைக்கலமாக வந்து நின்றான். சிறுவன் கண்களில் நீர்மல்கியிருந்தது “பெரியவா! எனக்கு அப்பா இல்லே, என் Image
தாயாரும், தங்கையும் பம்பாயில் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா சமையல் வேலை செய்கிறாள். என்னை மெட்ராஸில் கிறிஸ்துவ கான்வெண்டில் சேர்த்தார்கள். நான் எட்டாவது படிக்கிறேன். நிறைய மார்க்கு வாங்கறேன். இப்போ என்னை அவா கிறிஸ்துவ மதத்தில் சேருமாரும், எம். ஏ வரைக்கும்
படிக்க வைச்சு வேலை வாங்கி தருவதாயும் சொல்கிறார்கள். ஆனா எனக்கென்னவோ மதம் மாற மனசே இல்லை. மதம் மாற மாட்டேன். எனக்கு உபநயனம் நடக்க வேண்டும். எங்கம்மா கிட்டேயிருந்து நாலுமாசமா கடிதமே இல்லே. என் தாயும் தங்கையும் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை”
சிறுவன் அழுதவாறே
Read 11 tweets
#மகாபெரியவா
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஒரு கூர்கா, தரிசனத்துக்கு வந்தார். முகத்தில் கவலை தெரிந்தது.

"என்ன சமாசாரம்னு கேளு" என்று தொண்டரிடம் சொன்னார்கள் பெரியவா.

கூர்கா சொன்னார். "நான் பிறந்ததிலிருந்தே கஷ்டங்களைத்தான் அனுபவித்துக் கொண்டு Image
இருக்கிறேன். ஆனால் ஏதோ புண்ணிய வசத்தால் தெய்வ ஸ்வரூபமான பெரியவா தரிசனம் கிடைச்சிருக்கு. இனி எனக்கு ஜன்மாவே வரக் கூடாது என்று அனுக்ரஹம் பண்ணணும்.”

"ஆகா,அப்படியே ஆகுக! உனக்கு இனி ஜன்மாவே கிடையாது!" என்று பெரியவாள் சொல்லி விடவில்லை.

பின் மெதுவாகச் சொன்னார்கள்.

"அந்த மாதிரி வரம்
கொடுக்கும் சக்தி எனக்கு இல்லை. நான் தினந்தோறும் பூஜை செய்யும் சந்த்ரமௌளீஸ்வரரையும் த்ரிபுர சுந்தரியையும் உனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

கூர்காவுக்கு இந்தப் பதில் நியாயமாகப் பட்டது போலும். ஒரே குதூகலம் அவருக்கு. பிரசாதம் பெற்றுக் கொண்டு "எனக்கு இனிமேல் ஜன்மா கிடையாது.
Read 5 tweets
#மகாபெரியவா அருள்வாக்கு
நம் அப்பாவையும் அம்மாவையும் ஸ்வாமியாக நினைக்க வேண்டும். இதையே மாற்றி ஸ்வாமியையும் அப்பா அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும். ‘கொன்றை வேந்தன்’ என்ற நீதி நூலில் ஒளவைப் பாட்டி முதலில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறாள். இது தாய் தந்தையரைத் Image
தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள். ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும். ஸ்வாமி எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு நம்மைப்போல்
உருவம் இருக்க முடியாது. ஆனால் உருவம் இல்லாத ஒருவரை எப்படி நினைப்பது? அதனால் அவரை அப்பா அம்மா என்ற இரு உருவங்களில் நினைக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களில் நம்மிடம் ரொம்ப அன்பாக இருப்பது தாய், தந்தையர் தானே? அன்பாக இருப்பவர்களை நினைத்துக் கொண்டால்தான் நமக்கும் சந்தோஷமாக
Read 5 tweets
#மகாபெரியவா
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்- எம். சுப்புராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மும்பை வேத ரக்ஷண நிதிக்குழுவினர் (சுமார் 150 பேர்) தரிசனத்துக்கு வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்திருந்தோம்.
சாதுர்மாஸ்ய விரதத்தைப் பக்திப் பரவசத்துடன் நடத்தி வந்த Image
உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்தார்கள் பெரியவா.
“எனக்காக (வேதத்துக்காக) உழைக்கும் பக்தர்கள் மும்பையில் இருந்து வருகிறார்கள். அவர்களை நல்ல முறையில் வரவேற்க வேணும்”
பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் போதாதா! ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்கெல்லாம் மாலை மரியாதை; வழி நெடுகிலும் தோரணங்கள்! கோலாகலம்
உற்சாகம், அமர்க்களம் எங்களுக்கு எல்லாம் ரொம்பவும் திகைப்பாக இருந்தது. நாங்கள் என்ன முக்கியப் பிரமுகர்களா? கோடீஸ்வரகளா? பலவித அலுவல்கள் செய்து வரும் சாதாரண மக்கள். எங்களுக்கு ஏன் இவ்வளவு தடபுடலான வரவேற்பு? எங்களில் ஒருவர், உள்ளூர்ப் பிரமுகரைக் கேட்டேவிட்டார்.
“ஸ்ரீசரணாளே
Read 15 tweets
#மகாபெரியவா
திருமதி பிரேமா ரமணி அவர்களின் அனுபவங்கள்.
சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் ஹைதராபாத்தில் இருந்தபோது ஒரு தோழியின் திருமணத்திற்கு புடவை வாங்க அவளுடன் காஞ்சிபுரம் வந்தேன். அங்கே ஒரு தோழி வீட்டில் தங்கினோம். காலையில் மகா பெரியவாளை தரிசித்து விட்டு பின் மாலை Image
புடவை வாங்கப் போகலாம் என்று இருந்தோம். அவர்கள் வீட்டு மாடியில் ஒரு மாமி குடியிருப்பதாகவும் பக்ஷணங்கள் நன்றாகச் செய்வதாகவும் தங்கியிருந்த வீட்டுத் தோழி சொன்னாள். அப்போது அந்த மாமியே கீழிறங்கி வந்தார். அவர் கையில் ஒரு தட்டு. அதில் அழகழகாய் சீனி மிட்டாயில் விதவிதமான பொம்மைகள்.
கல்யாணத்தில் மாலைநேரம் விளையாடலில் வைப்பார்கள். தான் முதன் முதலாக செய்ததாகவும் முதலில் பெரியவாளுக்கு படைத்தபின் பிறருக்கு செய்யப் போவதாகவும் சொன்னார். நாங்களும் பெரியவாளைத்தான் பார்க்கப் போகிறோம் என்றவுடன் எங்களுடனேயே வந்தார். நாங்கள் சீக்கிரமே போய் விட்டதால் மடத்தில் அதிகம்
Read 11 tweets
#மகாபெரியவா
இராமேஸ்வரத்திலிருந்து ஒரு புரோகிதர் வந்தார். மூன்று தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாகச் சொன்னார்.

"ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவைப் பார்த்திருக்கியோ?"

"பார்த்திருக்கேன். சேவார்த்திகளை அழைத்துக் கொண்டு போய் காட்டியிருக்கேன்."

"நடராஜாவுக்கு ஏழு திரைகள் உண்டோ?" Image
புரோகிதருக்குக் குழப்பம் வந்து விட்டது. என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

பெரியவர் சொன்னார்.
"திருவாதிரை அன்னிக்கு, ஏழு படுதாக்கள் திரையாகப் போட்டு, நடராஜருக்குப் பூஜை செய்வார்கள். ஏழு திரை விலகியதும் நடராஜரைத் தரிசிக்கலாம். சரி அந்தக் கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"
ராமேஸ்வரத்தாருக்குக் கொஞ்சம் நடுக்கம்.

"நான் ஒரு நடராஜரைத் தான் பார்த்திருக்கேன்"

"மூணு நடராஜர் இருக்கு! போய்ப் பார்."

"ராமேஸ்வரம் கோவிலில், குருவாயூரைப் போல், செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?"

"ஆமாம்" என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

"ராமேஸ்வரத்தில்
Read 5 tweets
#மகாபெரியவா
#தேனம்பாக்கம்
சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் பிற சிறிய சாம்ராஜ்யங்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கோயில்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் புதுப்பித்து வழிபாட்டிற்குக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டின் இருண்ட நாட்களாக இருந்த நாத்திக Image
இயக்கங்கள் இருந்த போதிலும் அவரது காலம் பொற்காலம். 1950களில் ஒரு சமயம் மகா ஸ்வாமி மாலை நேரத்தில் மடத்தில் இருந்து நடக்கத் தொடங்கினார். அவர் வேகமாக நடப்பவர், பக்தர்களும் மடத்து ஊழியர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். மாலை 7 மணி அல்லது அதற்குப் பிறகு அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓர்
இடத்தில் நின்று பக்தர்களிடம், “அங்கே கோயில் இருக்கிறதா?” என்று கேட்டார். இருட்டி விட்டதால் பார்வைத் திறன் குறைவாக இருந்தது அனைவருக்கும். மேலும் புதர் மண்டி கிடந்தது. பக்தர்கள் அவரை அருகிலுள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவ்வூர் பெரியவர்கள் மகா பெரியவரிடம் அங்கு ஒரு
Read 11 tweets
#மகாபெரியவா அருள்வாக்கு

சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்று படுவது மட்டுமல்ல. நல்ல மனதில் எழுகின்ற நல்ல எண்ணங்களை மட்டும் வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம். நல்ல விளைவுகளைத் தரும் நல்ல சொற்களைப் பேசுவதே சத்தியம்.

தர்மம், நீதி ஆகிய குணங்களைக் கொண்டவனே பண்புடையவன். எந்த Image
சூழலிலும் தர்மத்தைப் பின்பற்றுபவனே உயர்ந்த மனிதன்.
சமூகசேவை எண்ணம் கொண்டவர்கள் குடும்பத்தையும் கடமையுணர்வோடு பாதுகாக்க வேண்டும்.
இறைவனை எண்ணிச் செய்யும் செயல்கள் எளிதாக நிறைவேறும். வழிபாட்டிற்கான பலன் நிச்சயம் நம்மைத் தேடி வரும். அறியாமல் செய்தாலும் கூட அதற்கான நன்மை நமக்குண்டு.
லாபநஷ்டக் கணக்கு மட்டுமே பார்த்துக் கொண்டு வியாபாரம் நடத்தக் கூடாது. பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என்னும் லட்சிய நோக்கமும் வியாபாரத்திற்கு மிகவும் அவசியம்.
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக் காட்டாகவே வாழ்வது தான் அதிக சக்தி வாய்ந்ததாகும். உபதேசம் செய்வது எளிதானது. ஆனால், அதன்
Read 4 tweets
#மகாபெரியவா
சங்கராம்ருதம் - 523
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

பல வருடங்களுக்கு முன் ஒருநாள் இரவு கொட்டித் தீர்த்துக் கொண்டு இருந்த மழையில், ஶ்ரீமடத்திலிருந்து ரெண்டு பேர், தொழிலதிபர் ஶ்ரீ A.C முத்தையாவின் வீட்டுக்கு வந்தார்கள். Image
அவர்களை தகுந்த முறையில் வரவேற்றார்.

“என்ன விஷயம்? இத்தன மழைல”

“பெரியவா ஆக்ஞை! சிதம்பரத்ல நடராஜருக்கு வைரக்ரீடம் பண்றதுக்காக நிதி தெரட்டச் சொல்லி பெரியவா உத்தரவிட்டிருக்கா! எங்களால ஓரளவுதான் முடிஞ்சுது. இங்க மெட்ராஸ்ல சில பேரைப் பாத்துக் கேக்கலாம்னு இருக்கோம். அதுக்கு நீங்க
தான் ஸஹாயம் பண்ணணும்”

பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் ஶ்ரீ முத்தையா.

“அதுக்கென்னங்க? பெரியவா உத்தரவிட்டாப் போறுமே! கட்டாயம் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்றேன் எவ்வளவு நிதி தெரட்டி தர முடியுமோ என்னால ஆனதை செய்யறேன் மீதி எவ்வளவு தேவையோ, அத நானே குடுக்கறேன் இது, எங்களோட பாக்யம்”
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!