Discover and read the best of Twitter Threads about #திருமங்கையாழ்வார்

Most recents (10)

திருச்சி அடுத்த #பிச்சாண்டார்கோவிலில் #உத்தமர்_கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும்
லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப் பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன.
வைணவ புராணத்தின்படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன்
வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது. சிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 மூர்த்தங்களில் (வடிவங்களில்) ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும்
Read 17 tweets
#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
Read 38 tweets
#திருமங்கையாழ்வார் அவரின் திருவவதார நன்னாள் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம். அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். அந்த நன்னாளில் ஆழ்வார் அரங்கன் சந்நிதியில் நின்று கொண்டு இருக்கிறார். #ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகள் எழுந்தருள அப்போதுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடந்து
அவர்கள் குளிர்ந்திருந்த நேரம். தன் திருநட்சத்திரமான அந்நன்னாளில் நம்பெருமாளுக்கு ஏதேனும் பெரிய அளவில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது ஆழ்வாருக்கு. நாராயணன் அருள் பரிபூர்ணமாகக் கிடைத்தவர் அன்றோ அவர். அதன் மூலம் அயர்வற மதிநலம் படைத்தவர்! கண்கள் மூடி பகவானையே மனதில்
நினைத்து அவர் சந்நிதியில் நின்று கொண்டிருக்கையில் எம்பெருமானைப் புகழ்ந்து அவரிடம் இருந்து பாசுர வரிகள் மடை திறந்த வெள்ளமென கொட்டின. அன்று அந்த பகவத் சந்நிதியில் ஒரு புது பிரபந்தம் உருவாயிற்று. அந்த பாசுர வரிகள் தான் பின்னர் #திருநெடுந்தாண்டகம் என்ற பெயரில் நாலாயிரத்தில் ஒரு
Read 9 tweets
*கார்த்திகையில் - கார்த்திகை 07.12.2022*
*திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்திரம்!*

ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!
நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*

திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார்.
Read 12 tweets
#இரண்டாவது_திவ்யதேசம்

#அருள்மிகு_அழகிய_மணவாளர் #திருக்கோயில்_உறையூர்_திருச்சி

மூலவர் :- அழகிய மணவாளர்
தாயார் :- கமலவல்லி

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார்

கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும்
கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
#திருமங்கையாழ்வார்

#தல_சிறப்பு

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர்,
கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில்,
Read 19 tweets
#புரட்டாசி ஸ்பெஷல்

காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், ஒரு கோரிக்கை வைத்தார். ‘‘சுவாமி. தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா? அதை
சொன்னால் நன்றாக இருக்குமே” என்றார். கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார். சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.
''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் #திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு
Read 6 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
#திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்து கொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்ற எண்ணத்துடனும், சிலர் ImageImage
அதை வெறும் கூலி வேலையாகவும், சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். ஒரு மாபெரும் பணியில் இதெல்லாம் சகஜம் தானே, அவரவர்க்கு அவரவர் மனசாட்சி தானே நீதிபதி?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த
அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். அன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் கணக்குப்பிள்ளை. திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். என்ன செய்வேன்? இந்த தொழிலார்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இவர்கள் எல்லாம்
Read 22 tweets
பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் #சாந்தீபனி என்ற குருவிடம் கற்றுக் தேர்ந்தபின் கண்ணன் அவரிடம் குருதக்‌ஷணையாக என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இருவரும் என்னிடம் பயின்றதே பெரும் பாக்கியம் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்
மனைவிக்கு தங்களின் இறந்து போன ஒரே புதல்வன் திரும்ப உயிருடன் வரவேண்டும் என்கிற ஆசை இருந்ததால் மனைவிக்காக அதை கேட்கிறார். உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா, உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன்
வினவியபோது, பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான்
கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் #பாஞ்சஜன்யம் என்னும்
Read 6 tweets
#அருள்மிகு_குடமாடு_கூத்தன்_திருக்கோயில்

வஞ்சனையால் வந்தவதனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமுதுண்டு வலிமிக்க கஞ்சனுயிரது வுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரி சந்தகில் கனக முந்தி மஞ்சுலவும் பொழிலாடும் வயலாடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி 🇮🇳🙏1
அஞ்சலித்தங் கரிசரனென்று இரைஞ்சு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.
#திருமங்கையாழ்வார்

#திருவிழா

வைகாசி விசாகம், தை மாதத்தில் கருட சேவை.

#தலசிறப்பு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 29 வது திவ்ய தேசம்.

🇮🇳🙏2
#பொதுதகவல்

இங்கு மூலவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

#விமானம்

உச்சரூருங்க விமானம் பிரகாரத்தில் ஆழ்வார்கள், ராமர் சீதை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.

🇮🇳🙏3
Read 19 tweets
#Poonjeri - A Pallava Sea-port near Mamallapuram!

#Mamallapuram, the famous centre of #Pallava art, is also said to have been a sea-port right from the beginning of the Common Era!
#Perumpanarruppadai, one of the #Sangam classics written by the poet 'Katiyalur Uruthiran Kannanar' refers to a place called #Nirpeyar, the city which abounds in sea-borne goods as an active sea-port of 'Tondaiman llanthiraiyan' of #Kanchi!

#பெரும்பாணாற்றுப்படை
The place called #Malange mentioned by #Ptolemy, a Greek Geographer of the 2nd Century CE may be #Mamallapuram!

On the basis of the find of #Roman coins of #Theodosius (4th Century CE) at #Mamallapuram had contact with countries beyond the sea, particularly with #Roman Empire!
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!