Discover and read the best of Twitter Threads about #கலைஞர்100

Most recents (20)

#கலைஞர்100

நான் வளைகுடா நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பில் (design) சீனியர் லெவலில் வேலை செய்கிறேன்.

என் உயர் அதிகாரி ஒரு பாகிஸ்தான் நாட்டவர். அவர் என்னிடம் கேட்டார் "எப்படி தமிழர்கள் பெரும்பாலானோர், தொழில்நுட்ப துறையில் மற்ற இந்தியர்களை காட்டிலும்
1/n Image
முன்னணியில் இருக்கிறீர்கள்?" என்று.

பின்பு ஒரு மணி நேரம் அவருக்கு தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களைவிட தனித்து நிற்கிறது என்று விளக்கினேன்.

உலகளவில் ஆயில் & கேஸ் துறைக்கு தேவையான, HDPE பைப் தயாரிக்கும் இரண்டே நிறுவனங்களில் ஒன்று ஒமானில் உள்ளது (NOV Fiberspar), மற்றொன்று
2/n
சென்னையில் உள்ளது (Future Pipes). இரண்டுமே பன்னாட்டு நிறுவனங்கள்.

பெட்ரோலிய துறைக்கு தேவையான Centrifugal Pump தயாரிக்கும் பெரு நிறுவனங்களில் ஒன்று கோவையில் உள்ளது (Flowserv), ஒன்று சென்னையில் உள்ளது (Ruhrpumpen). இவை இல்லாமல் ஒன்று ஜப்பானில் (Ebara), மற்றொன்று தென்
3/n
Read 7 tweets
#கலைஞர்100

முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்..

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை
1/n Image
எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து கொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு,

இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில்
கலந்துகொண்டார்.
2/n
“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்று முழக்கமிட்டபடி சென்ற கலைஞர், மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, இந்தி ஆசிரியரிடம் அடி வாங்கும் நிலை ஏற்பட்டது. அடி வாங்கினாலும் தமிழ் ஆர்வம் குறையாத கலைஞர், தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
3/n
Read 4 tweets
#கலைஞர்100
#கலைஞர்_நூற்றாண்டுவிழா

கலைஞர் அவர்கள், பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் இருந்த போது எழுதிய ஒரு மடல்.

அன்புள்ள நண்பா,
இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.. ஒரே அமைதி...
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறேன்..
நீண்ட நேரம் மௌனமாக இருக்கிறேன்..
1/n Image
பேச்சின்றி விவாதமின்றி ஓசையின்றி...
அசைவின்றி..
வளரும் தாவர வாழ்க்கை... ஓய்வு உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கும் நல்லது..
அது நம்மை சிந்திக்க வைக்கிறது...!

முரசொலி பவளவிழா கண்காட்சியில் கலைஞர் இக்கடிதத்தை எழுதுவதுபோல் சிலைவடித்து அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தில் உள்ள
2/n
ஒவ்வொரு வார்த்தையும் பல பொருள் பட அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.

தனிமை சிறையில் அடிக்கப்பட்டும் கூட அதனை நேர்மறை எண்ணமாக எடுத்துக்கொண்டு ஒருவரால் உணர முடிகிறது என்றால் அது கலைஞர் ஒருவரால் தான் முடியும் என்பதை இந்த கடிதம் உணர்த்துகிறது.

அன்று அரசாங்கம் கொடுத்த தனிமைச்
3/n
Read 5 tweets
#கலைஞர்100

சென்னை தீவுத்திடல், தேதி 11-05-2007 தலைவர் கலைஞர் சட்டமன்றத் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.

இந்தியாவில் உள்ள பல முன்னணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது.

அந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் தலைவர் கலைஞர் பற்றியும் அவரின் என்னிலடங்கா
1/n Image
சமூகநீதி சாதனைகளை பற்றியும் பேசி இருப்பார்கள்.

அதில் ராம் விலாஸ் பாஸ்வான் குறிப்பிட்டு சொல்வார்

"Nobody is in doubt that New Delhi is capital of this country but the Tamilnadu is the capital of social justice"

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்..

அப்போதைய
2/n
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி,
ஆசிரியர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தோழர் பரதன்,
தோழர் பிரகாஷ் காரத்,
லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான்,
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத
3/n
Read 4 tweets
#கலைஞர்100
கலைஞரின் நூற்றாண்டு இந்த ஆண்டு முழுவதும் கலைஞர் பற்றிய தகவல்களை தினம் தினம் எழுதுவோம்..

கலைஞர் எந்தச் செயலையும் மிகுந்த கவனத்துடன்தான் அணுகுவார். அவர் முதலமைச்சராக இருக்கும் போது படிக்காமல் கையெழுத்து போட்ட கோப்பு ஒன்று கூட இருக்காது.
அப்படி, தான் மேற்கொண்ட
1/n Image
செயலில் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையும், சிரத்தையும், கவனமும் கொண்டிருப்பார். அவர் சிந்தனையில் உதித்து உருவான பல சமூக நீதி சார்ந்த திட்டங்கள் அவரின் விலாசமான பார்வையை நமக்கு உரக்கச் சொல்லும்.
அதிலும், 1969 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் கலைஞருடைய அரசு செயல்பட்ட விதம்,
2/n
அபாரமானது. ஒரு முழு முதற் திராவிட ஆட்சி, 1967 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றது.
அண்ணா இருந்திருந்தால் என்னென்ன வகையில் செயல்பட்டிருப்பாரோ, அதை அவரின் பாதையைப் பின்பற்றி ஆட்சி நடத்திய கலைஞர் செய்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரின் பார்வை எப்போதும்
3/n
Read 10 tweets
*🏵️*கலைஞர்* *சாதனைகள்*

_🏵️இந்தியாவிலேயே முதல் முறையாக கலைஞர் அவர்கள் செய்த, சில சாதனை திட்டங்கள்._

விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.குடிசை மாற்று வாரியம் அமைத்து
குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் அமைத்து அவர்களை குடியேற்றினார்.

■தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும் இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார்.

■இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச்
சீர்திருத்தி அமைத்தார்.

■பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 10,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் தொகை வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.

■தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வரதராசன் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கினார்.
Read 25 tweets
கலைஞர் என்ன செய்தார்?

புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்.

பாரிஸ் கானரை பாரிமுனை என்றார்.
பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்.
ஜெமினி நிறுத்தத்தை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்.
ஏஜிஎஸ் நிறுத்தத்தை அறிவாலயம் ஆக்கினார்.
லேக் ஏரியாவை வள்ளுவர் Image
கோட்டம் ஆக்கினார்.
தேனாம்பேட்டை நிறுத்தத்தை வானவில் ஆக்கினார்.
வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார்.
டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார்.
மவுண்ட் சாலையை அண்ணா சாலை ஆக்கினார்.
கடற்கரை சாலையில் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரில்... கண்ணகி சிலை ஸ்டாப்பிங் என்கிறார்
கண்டக்டர்.
காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்.
குமரியிலே ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து அடையாளப்படுத்தினார்.
தமிழகம் எங்கும் எத்தனை மேம்பாலங்கள்... எத்தனை சுரங்கப்பாதைகள்... எத்தனை சமூக அரங்குகள்... எத்தனை உழவர் சந்தைகள்... எத்தனை
Read 9 tweets
இன்று உங்களுக்கு நூறாண்டு.

உங்களை நாங்கள்
கலைஞர் என்று
அழைக்கும் போது
அந்தத் தமிழே பெருமை கொள்கிறது

உங்களைத் தலைவர்
என்று அழைக்கும் போது
எங்கள் நாடி நரம்பெல்லாம் வீரம் கொள்கிறது.

உங்களை முதல்வர்
என்று அழைத்த போது
எங்கள் கனவுகள்
மெய்ப்பட்டது.

உங்களைத் திரையில்
பார்த்த போது,
அந்தத் திரைத்துறையே பெருமை கொண்டது.

சுயமரியாதை,சமூகநீதி
பகுத்தறிவு பண்பு
மாண்பு மன்னித்தல்
இவற்றுக்கான
உதாரணம் நீங்கள்,

உங்களைப் பற்றி எழுத எங்களுக்கு
ஒரு நூறாண்டு வேண்டும்.

தோல்விகளால் நீங்கள்
துவண்டதே கிடையாது.
சிறைவாசம் சிறந்த
சகவாசம் என்று
அனுபவித்தவர் நீங்கள்.
விடை தேடும் பலருக்குப்
பதிலாய் நீங்கள் மீண்டு வருகிறது தமிழகம் உங்கள் காலடிச்
சுவடுகளால்.

அவமானம் வேதனை
துன்பம் துயரம் என்ற படிக்கட்டுகளைத் தாண்டிச் சென்றால்
வெற்றி எனும்
படிக்கட்டை அடையலாம்
என்று கற்றுக் கொடுத்தவர் நீங்கள்.

உங்களை அழிக்க
நினைத்தவர்கள்
அழிந்துப் போனது
Read 5 tweets
உம்மை வாழ்த்த எங்களுக்கு இல்லாத உரிமையா..

நாங்கள் வாழ்த்துகிறோம்.

தாய் மொழி ஆள போராடிய தலைவர் என்பதால்

தந்தை பெரியார் அறிந்த தலைவர் என்பதால்

அண்ணாவின் இதயத்தை கொண்டவர் என்பதால்

தம்பிகள் படை கொண்ட உடன்பிறப்பென்பதால்
தொண்டனை காலில் விழவைக்காத
சுயமரியாதை மதிக்கும் தலைவர் என்பதால்

ஒற்றை கலை அறிந்து தோள்களை உயர்த்துவோர் மத்தியில் மெத்த பல கலை கண்ட கலைஞர் என்பதால்

நாங்கள் வாழ்த்துகிறோம்

மங்காத தமிழ் கொண்ட சொல்லாளன் என்பதால்

இடர்களில் அஞ்சா போராளி என்பதால்
சோர்வுக்கு சோர்வு தந்த உழைப்பாளி என்பதால்

ஆளும் நேரத்தில் ஆடியதில்லை

வீழ்ந்த போதிலும் வாடியதில்லை என்பதால்

உம்மில்,
உரமேறிய பெரியாரின் கறுப்புக் கொள்கைகளும்

இயல்பாய் வந்து செல்லும் சிவப்புச் சிந்தனைகளும்
உண்டென்பதால்
Read 5 tweets
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், கலைஞரின் அரசியல் பங்களிப்பு, தொலைநோக்குப் பார்வை பற்றி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் எழுத்தாளரும் திராவிட இயக்க செயற்பாட்டாளருமான டான் அசோக்.

டான் அசோக் பேசுகையில், "60களில்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் உத்தர பிரதேசமும், தமிழ்நாடும் ஒன்றுதான். எல்லா மாநிலங்களும் ஒன்றுதான். இந்த 60 வருடங்களில் எப்படி மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வித்தியாசப்படுகிறது? யார் மூலம் இந்த வளர்ச்சி நடந்திருக்கிறது? எதனால் பாஜகவால் மதத்தை அரசியல்
பொருளாக்கி வியாபாரம் செய்து வாக்குகளை பெற முடியவில்லை என்பதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கலைஞரின் பங்களிப்பு:
இந்தியாவிற்கு கலைஞரின் பங்களிப்பு மிக அதிகம். மண்டல் கமிஷனில் கலைஞரின் பங்களிப்பு எவ்வளவு என்பதை வி.பி.சிங்கே பல மேடைகளில் பேசியுள்ளார்.
Read 13 tweets
#கலைஞர்100 ❤️🖤

"வந்துட்டானுங்க திராவிடத்தால் வீழ்ந்தோம்"ன்னு கோமாளிகள்.

இவனுங்க போற்றும் மன்னராட்சி காலத்துல என்னமோ எல்லா மக்களும் ஒரே தட்டுல சாப்பிட்டு,
ஒன்னா வாழ்ந்த மாதிரி பீத்தல் கூந்தல் வேற.

இங்க ஜாதிங்குற சடங்கு முறை எத்தனை ஆண்டுகளா இருக்கு..?
அதனால வந்த ஏற்றத்தாழ்வு என்னென்ன..?

எத்தனை ஆண்டுகளா யாருக்கெல்லாம் அடிமைகளா இருந்தோம்..?

மக்களாட்சிங்குற பேர்ல,
விடுதலைக்குப் பிறகு என்னென்ன உரிமைகள் மாநிலத்துக்கு இருக்கு..?

திராவிடக் கட்சிகளின் ஆட்சி.. அதுல,
நீங்க பொழுது விடிஞ்சா Powder, Soap தடவுறத மறந்தாலும்
மறக்காம திட்ற திமுக ஆட்சி எத்தனை ஆண்டுகள்..?

திமுகவும் - அதிமுகவும் என்னென்ன திட்டங்கள் & சட்டங்களை உருவாக்கினாங்க..?

வாய்க்கு வந்ததையெல்லாம் உண்மை போலே பேசுற உங்களுக்கு இதெல்லாம் கணக்குப் போடுற அறிவு எப்ப வரும்..?

எத்தனை முறை விளக்கம் சொன்னாலும்,
மீண்டும் ஒரு முறை அதே
Read 4 tweets
திராவிடப் பெருந்தலைவர் 🔥

1. வள்ளுவர் கோட்டம்
2. பராசக்தி
3. 108
4. அண்ணா நூற்றாண்டு நூலகம்
5. திராவிடம்
6. எழுத்து
7. சமத்துவபுரம்
8. பூம்புகார் கலைக்கூடம்
9. முரசொலி
10. உழைப்பு
11. அண்ணா அறிவாலயம்
12. பெண்கள் சொத்துரிமை சட்டம்
13. மனோகரா
14. குறளோவியம்
15. கோயம்பேடு பேருந்து நிலையம்
16. கண்ணொளி திட்டம்
17. குளித்தலை
18. உழவர் சந்தை
19. குடிசை மாற்று வாரியம்
20. செம்மொழி
21. திருக்குவளை
22. திருமண உதவி திட்டம்
23. தொல்காப்பிய பூங்கா
24. கைரிக்‌ஷா ஒழிப்பு
25. அய்யன் வள்ளுவர் சிலை
26. இந்தி ஆதிக்க எதிர்ப்பு
27. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
28. சிற்றுந்து
29. விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
30. இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு
31. அடையாறு தொல்காப்பியப் பூங்கா
32. கோபாலபுரம்
33. நெஞ்சுக்கு நீதி
34. பகுத்தறிவு
35. புதிய தலைமைச் செயலகம்
36. பாலைவன ரோஜாக்கள்
37. சமச்சீர் கல்வி
Read 9 tweets
கேள்வி: இசைஞானி பட்டம் கொடுத்த கலைஞர் கருணாநிதி குறித்து தங்கள் கருத்து?

இசைஞானி: அவர் என்னை இசைஞானியாக பார்த்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். திருச்சியில் இருந்து காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். எனக்கு அது பாராட்டு விழாவாகத் தான் இருந்தது. அதுவே எனக்கு Image
பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியாக மாறும் என்பது தெரியாது. நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் அப்போது நான் எழுதியிருந்த "வெட்ட வெளிதனில் கொட்டி கிடக்குது, சங்கீத கனவுகள்” இரண்டு புத்தகங்களையும் படித்துக் கொண்டே வந்திருக்கிறார். கூட்டத்துக்கு வந்தவர் புத்தகங்களை படித்தது பற்றி சொன்னார்.
அதை மேடையில் குறிப்பிட்டு இசையிலும், ஆன்மிகத்திலும் இளையராஜா இருப்பதால், அவருக்கு "இசைஞானி" என்ற பட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார்.

அதன் பின் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் "இசைஞானியார் என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் தாயார் பெயர்” என்றேன்.
Read 5 tweets
#கலைஞர்100
*இந்தியாவிலேயே முதன் முறையாக..*

முதன் முறை நாயகன் கலைஞரின்🖋️ முதன்முறை சாதனைகள்...

🖤❤️இந்தியாவிலேயே முதன் முறையாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை திட்டத்தை நிறைவேற்றினார்.

🖤❤️அவர் ஆட்சியில் தான் 1973இல் இந்தியாவிலேயே முதன் முறையாக காவல்துறையில் பெண்கள் Image
பணி நியமனம் செய்யப்பட்டது.

🖤❤️2010ஆம் ஆண்டிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில்
mechanics, architecture போன்ற பட்டப்படிப்புகளை தமிழிலேயே படிக்க வழிவகுத்தார்.இப்படி தொழில்நுட்பம், தொழிற்கல்வி பட்டப்படிப்புகளைக் கூட தாய்மொழியிலேயே படிக்க வழிவகை செய்தார்.செய்ததும் இந்தியாவிலேயே
முதன் முறையாக தமிழ்நாட்டில் தான்.

🖤❤️1989ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் ஆட்சியில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்த இலவச buspass ,1996 கலைஞர் ஆட்சியில் 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது.இந்த இலவச buspass திட்டம் கூட தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக அமல்படுத்தப்பட்டது.
Read 11 tweets
*சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்....*

கலைஞருக்கு தெரியும்..

விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.

அதனால் தான்...!

*வள்ளுவனை.. வானுயர நிறுவினார்..!*

கலைஞருக்கு தெரியும்...

வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று.. Image
அதனால் தான்...!

*திருக்குறளை முன்னிலை படுத்தினார்..!*

கலைஞருக்கு தெரியும்..

சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று...

அதனால் தான்...!

*கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்..!*

கலைஞருக்கு தெரியும்...

மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று..

அதனால் தான்...!
*சிலப்பதிகாரத்தை வெகுஜனப் படுத்தினார்...!*

இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார்.

ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை...
Read 5 tweets
அண்ணாவை மறந்த #திமுக (2)

மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு ஒரு முக்கியமான பதிவு.

‘யதா ராஜா ததா ப்ரஜா என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்’ என்றார்.

பிரிவினைக் கோரிக்கையை கைவிடாத அந்தக் காலத்திலும், ஸம்ஸ்க்ருத மேற்கோள் காட்ட அவர் தயங்கவில்லை. Image
ஹிந்தியை எதிர்க்கும் போதுகூட..

‘இதை #ராஜாஜி யிடம் விட்டு விடலாம். காலில் முள்தைத்து விட்டது. இந்த முள்ளை எடுக்க பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் முள்ளை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’
என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் #அண்ணா Image
இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு…

#திராவிட இயக்கத்தின் நங்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் #அண்ணா

‘முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று #அண்ணா, சட்டமன்றத்தில் உரையாற்றினார். Image
Read 5 tweets
அண்ணாவை மறந்த #திமுக வரலாறு (1)

தளபதி அண்ணாதுரை மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வெ.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார். Image
ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள்.

சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ #திமுக என்று தீர்மானிக்கப் பட்டது.
அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ (திராவிடர்) இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார்.
Read 4 tweets
1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.

2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.

3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான்.

4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான்.

6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.

6.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

6.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.
7.,தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.

8.அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.

9.ITயில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.

10.நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
Read 5 tweets
தஞ்சையின் சிங்கமாக வலம் வந்தவர் கோ.சி.மணி அவரை ‘சின்னக் கலைஞர்’ என்றும் சொல்வார்கள். கலைஞரை விட 5வயதுதான் குறைவு. திமுக ஆரம்பித்த நாள் முதல் கட்சியின் உறுப்பினராக இருப்பவர். கலைஞரும் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதால், ImageImage
அவரைப்போலவே தன்னை வார்த்துக்கொண்டவர் கோ.சி.மணி தலைவரைப்போலவே தலையை நேர் வகுடு எடுத்து,அவரது நாடகங்களில் நடித்து, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்து.. இன்று வயதானாலும் அவரது பழைய பெருமைகளை பேசும் பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர். ♥️🖤
அதனால்தான்,’பழக தெரிந்த நாள் முதலாக என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட, என் உயிரனைய, உயிருக்கு உயிரான, உயிரினும் உயர்வான உடன்பிறப்பு’ என்று கலைஞரால் உச்சி முகர்ந்து பாராட்டப்பட்டார்.#கலைஞர்100
Read 5 tweets
இராணுவத்திலிருந்து சில தமிழக ஜவான்கள் கலைஞருக்கு ஒரு கடிதம் 1969ல் எழுதுகிறார்கள். உங்கள் ஆட்சி சீரும் சிறப்புமாக நடைபெறும் இந்த நாளில் ‘மதாரஸ் வானொலி நிலையம்’ என்று அறிப்பதை, நீங்கள் தமிழில் மாற்றக்கூடாதா என்று Inland கடிதம் மூலம் கேட்கிறார்கள். ♥️🖤 ImageImage
உடனே தலைவர் ஆணையிடுகிறார் நாளை முதல் ‘சென்னை வானொலி நிலையம்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்று. கலைஞர் தலைவர்களின் தலைவர் மட்டும் இல்லை; அவர் சாதரண மக்களின் மனுக்களுக்கு தீர்வளிக்கும் தலைவரும் ஆவார்.#கலைஞர்100
உலகில் கலைஞருக்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் இருதிருக்கலாம். ஆனா சாதரண மனு என்று விட்டுவிடாமல் அதனையும் மதித்து சட்டத்திலும் அரசானையிலும் எளிய மக்களின் குரலை இடம்பெற செய்த தன்னிகற்ற தலைவர் என்ற வரலாற்று பெருமை தலைவர் கலைஞருக்கே உரியதாகும். ♥️🖤
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!