Discover and read the best of Twitter Threads about #கலைஞர்

Most recents (24)

#என்ன_செய்தார்_கலைஞர் 1

நான் சார்ந்திருக்கும் கவுண்டர் சமூகத்திற்கு கலைஞர் என்னதான் புடுங்கினார் என்பவர்களுக்கு நான் என்னில் இருந்தே விளக்குகிறேன்.

நான் 10வது தேர்ச்சி பெற்றவருடம் 1985.

டிசியை வாங்குகிறேன் அப்பவெல்லாம் சாதிச்சான்றிதழைப்பற்றி ஒரு மயிறும் தெரியாது. Image
டிசியில் வெள்ளாளார் என்று இருக்கு.

அதற்குப்பிறகு தொழில்கல்வி அதாவது கோவை ITI யில் எலக்ட்டீரிசியன் மோட்டார் மெக்கானிக்கல்.

இரண்டிற்கும் என் தாயாரின் தோழியான சுகுணா டீச்சரின் கணவர் அன்றைக்கு ITI ஆசிரியர் அவரிடம் சொல்லி அவர் விண்ணப்பிக்கிறார்.

கொங்கு வேளாளர் என்று டிசியில்
இருந்தால் உங்கள் மகனுக்கு எளிதாக ஐடிஐயில் வாய்ப்புடைக்கும் என்று என்று என் அம்மாவிடம் சுகுணாடீச்சரின் கணவர் சொல்லுகிறார்

அன்றைக்கு என்பெரியப்பாவான நடராசன் ஆசிரியர் தலைமை துணை ஆசிரியர்.

அவரிடம் என்னை அழைத்து முறையிட்டபோது இனி யெல்லாம் மாற்ற முடியாது என்றார்.
Read 10 tweets
*"என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே"*...🙏🙏💪💪💪💐💐🏴🚩🏴🚩

*இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி சாத்தியப்படுத்தியது - பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கியது - அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியது - உழவர் சந்தை முதல்
சமத்துவபுரம் வரை உருவாக்கியது - தமிழை கட்டாயப் பாடமாக மாற்றி உயர்நிலைப்பள்ளி வரையிலான கல்வியை இலவசமாக கொடுத்தது - சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு மறுவாழ்வு மையங்களை உருவாக்கியது - 'பஸ் பாஸ் - மிதிவண்டி - கணிணி - சீருடை -
புத்தகம்' என விளிம்புநிலை மாணவனுக்கும் கல்வியை இலவசமாக கற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுத்தது என பட்டியலிட முடியா சமூக நீதிச் சாதனைகளை சாதித்துக் காட்டிய வரலாற்றுப் புரட்சியாளர் நம் இனத் தலைவர் கலைஞர் அவர்கள்*...🙏🙏🙏🖤❤️🖤❤️

*நூற்றாண்டு போற்றும் உன்னதமே*...
Read 4 tweets
'தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன'

-என்று ஒரு கட்டுரை எழுதினார் இந்தியாடுடே-வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி..

கட்டுரையை படித்த திமுக தலைவர் #கலைஞர், உடனடியாக வாஸந்தியை அழைத்து,

"தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" 1/4 Image
என்று வஞ்சப்புகழ்ச்சி அணியில் கூற...

துடிதுடித்துப் போனார் வாஸந்தி.

தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, 'கலைஞர் இப்படி பேசி விட்டார்' என்று புலம்பித் தள்ளினாராம்...

மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்க..‌2/4
பின்ன என்னய்யா... தேவதாசி முறை வேணுமாம். ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று கூற..

இந்த விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, சில நாட்களிலேயே, தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து 'விட்டு விடுதலையாகி' 3/4
Read 4 tweets
#கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய்பாபா வந்தார்.. உலகமே அசந்தது.. பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்... சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்..

எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது.. Image
பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்.... சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...
பின்னாளில் பாபாவிடம் நெருக்கமாக இருந்த ஓர் ஆத்திகர் என்னிடம் இது குறித்த உண்மையைச் சொன்னார்...,

அவர்,ஒரு சத் சங்கத்தின் போது பாபாவைச் சந்தித்தாராம். நிறைய தமிழ் பக்தர்களும் அங்கு இருந்தனராம்.. அப்போது,அவர், கோபமாக, பாபாவிடம்.. ”அந்த நாத்திகரை (கலைஞரை) நீங்கள் வீடு தேடிப்போகலாமா
Read 5 tweets
#கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? - என். ராம் பேட்டி

கேள்வி : இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?

என். ராம் : விடுதலை புலிகள் எப்போதுமே கலைஞரை விட எம்.ஜி.ஆரை
விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து கலைஞருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .

ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கலைஞர்.
அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கலைஞர் மீதே வசவுகள் விழுந்தன''.
Read 13 tweets
1/10
சில நாட்களுக்கு முன் #திருவள்ளுவர் பாறைக்கும் #விவேகானந்தர் மண்டபத்திற்கும் சென்றோம். திருவள்ளுவரின் 7000 டன் எடை கொண்ட, 133 அடி உயரச் சிலை (மண்டபம் + சிலை) மிக முக்கியமான, அழகான மிகச்சரியான இடத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. எல்லா சிலைகளும் பண்பாடு, அரசியல் நோக்கங்கள் கொண்டவை. ImageImage
2/10
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்ததாக கருதபட்ட பாறையில் RSS ன் ஏக்நாத் ரானடே 1971ல் #கலைஞர் அரசிடம் அனுமதி பெற்று சிலை எழுப்பிய சில வருடங்களிலேயே அங்கு வள்ளுவருக்கு தக்கதொரு சிலை எழுப்பவேண்டியதை கலைஞர் உணர்ந்து 1973ல் அப்பணியைத் தொடங்கியிருக்கிறார். ImageImage
3/10
அப்பாறைக்கு வருகிற ஒவ்வொரு வடநாட்டுப்பயணியும் திருவள்ளுவர் என்கிற சனாதனம் தீண்டாத பெயரை உச்சரிக்கின்றனர். படகில் என் அருகில் இருந்த பதின்பருவப் பெண் போனில் திருவள்ளுவரை விக்கியில் படித்துக்கொண்டு வந்தார். எப்படி அரசுப் பேருந்துகளில் கலைஞரால் எழுதபட்டு திருக்குறள் ImageImage
Read 11 tweets
"கொரோனா" பேரழிவு காலம் தொடங்கி இன்று வரை, வட இந்தியாவையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு, "தமிழ்நாடு" எல்லா வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ளதற்கு "கலைஞர்"தான் முக்கிய காரணம் என கட்சி சார்பற்று பலரும் பதிவிட்டனர்.

இது ஒரு வகையில் மகிழ்ச்சியே, ஆயினும் அவர் உயிருடன் இருந்த காலத்தில் Image
செய்யாத தவறுக்கும் பல சில்லறைகள் அவர் மீது வன்மத்துடன் கல்லெறிந்தன, இப்போதும் எறிகின்றன. அதேப் போல அவர் செய்த எந்த ஒரு நற்செயலுக்கும் அதற்குரிய அங்கிகாரம் பெற்றவர் இல்லை. இப்படிபட்ட வன்மத்திற்கு பின்னுள்ள உளவியல் மிக எளிமையானது. எல்லோருக்கும் அது தெரிந்ததுதான். எனவே அதை கடந்து
செல்லலாம். ஆனால், இயற்கை பாரபட்சமற்றது. அவ்வியற்கைதான் இன்று #கலைஞர் என்ற மாமனிதனின் தொலைநோக்கு பார்வையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. பல்லாயிரம் குரல்களால் விளக்க முடியாததை சிறு சிறு செயல்களால் விளக்கி செல்கிறது.

"கியூபா"வின் விடிவெள்ளி "பிடல் காஸ்ட்ரோ" சொன்னது தான் நினைவுக்கு
Read 4 tweets
ஈழமும் கலைஞரும்.....

#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை.
1/6 Image
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்)
2/6 Image
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது

பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது
3/6 Image
Read 6 tweets
நான் மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த சாதாரண குடிமகன்.ஒவ்வொரு திருமண நிகழ்வுகளிலும் இலவசங்கள் எதற்கு என்று என்னைவிட இளைய வயது சகோதரர்கள் அதிகம் பேசுகிறார்கள்.உள்ளபடியே அதிர்ச்சியாக இருக்கிறது.பார் போற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் உள்ளவர்,கல்வியில் தேர்ச்சி பெற்று ++
சிந்திக்கும் திறன் உடையவர் - எப்படி பொத்தாம் பொதுவாக பேசுகிறார் என்று சற்று அதிர்ந்தேன்.சரி, பேச்சு கொடுப்போம் என்று அவர் கூற வேண்டியவற்றை முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.எதிர்பார்த்த மாதிரியே, இலவசங்கள் மற்றும் சமூகநீதி இடஒதுக்கீடு தான் வளர்ச்சியின் தடைகள் என்றும், வளைந்து ++
நெளிந்து நாதக வகையில் இனவாதம்,குடி பெருமை என்றும் பேசி, கிட்டத்தட்ட Pseudoscience மாதிரியே அறிவியலை அவ -அறிவியல் சேர்த்து ஒரு கலவையாக பேசிட்டு இருந்தார்.சரி, நம்ம தம்பி தான் பேசட்டும்-பேசி முடிக்கட்டும் ன்னு முடியும் வரை காத்திருந்தேன்.அதிமுக சார்பு மூத்தோர் ஒருவர் வந்து ++
Read 14 tweets
#ராகுலைவிரும்பும்_தமிழ்நாடு

ராகுலுக்குள் கொஞ்சூண்டு #கலைஞர் இருக்கிறார்

நரேந்திராவுக்கு பதிலடி கொடுக்க சரியான ஆள் என்று தமிழ்நாடு 2018லயே உணர்த்திருந்தது.

காங்கிரஸ் உள்ளேயும் வெளியேயும் ராகுல் குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு மூர்க்கத்தனமாக தமிழ்நாடு பதிலடி கொடுத்தது
#காங்கிரஸ்_மென்சங்கிகள்
ஜோதிராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத் போன்ற பழம் தின்னு கொட்டை போட்ட சுயநலவாதிகள் ராகுலை எதிர்த்து வெளியேறிய போது அவர்கள் தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்தது போல் தமிழர்கள் சமூக வெளியில் காறி துப்பினார்கள். கார்த்தி சிதம்பரம் இப்ப வரை troll செய்யப் படுகிறார்
#ராகுலுடன்_உடன்பிறப்புகள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் திமுக உடன் பிறப்புகள் சமூக வெளியில் பகிர்ந்த மீம்கள், கோபப் பதிவுகள் வைரலாகின. பழைய கசப்புணர்வுகளை மறந்து மூத்த திமுகவினரே ராகுலுடன் நின்றனர்
Read 16 tweets
1972ல் வெளியான குறத்தி மகன் திரைப்படம் பெறும் வெற்றி பெற்றது.

அது சமயம் அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனை கற்பகம் ஸ்டூடியோவில் நரிக்குறவர் இன மக்கள் கூட்டமாக வந்து சந்தித்தனர்..

அப்போது "சாமீய்... உங்க படத்துல படிச்சா தான் முன்னுக்கு வரமுடியும்னு சொன்னீங்க. ஒங்க Image
படத்தை பார்த்த பிறகுதான் படிப்போட அருமை பெருமை எங்களுக்கு புரிஞ்சது. எங்க புள்ளைங்களாம் படிக்க நீங்களே ஒரு பள்ளிக்கூடம் கட்டி குடுங்க சாமீய்"னு

அவங்க பேசி முடிக்க இயக்குனரான அவர், "பள்ளிக்கூடம்லாம் தனி மனிதரால சாத்தியப்படாது. ஒருவேளை தொடங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது. Image
நிறைய சட்ட திட்டங்கள் இருக்கு'ன்னு

அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த மக்களும் விடுவதாக தெரியல..

"என்ன சாமி நீங்க நாங்களாம் படிச்சி வாழ்க்கைல முன்னேறனும்னு படம் எடுத்து விட்டுட்டு இப்ப எங்களை படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னா எப்படி"ன்னு அவர்களும் அழ..

நிலைமை ரசாபாசமானது. Image
Read 16 tweets
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
ஒருமுறை ஒரு பாராட்டு விழா. அந்தப் பாராட்டு விழாவில் என் பேராசிரியர் க.ப.அறவாணன் ஒன்று சொன்னார், ஆங்கிலத்தில் ஒரு தலைவனுக்கு ஐந்து விதமான குணநலன்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை A-B-C-D E என்று வரிசைப்படுத்தப்படுகிறது”- என்று சொன்னார்.
A for ABILITY
B for BEAUTY
C for CLARITY
D for DIGNITY
E for EDUCATIVE

இவை ஐந்தும் அமையப் பெற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் #கலைஞர் தான் என்று அவர் சொன்னார்.*

இவ்வளவு பெரிய பாராட்டுக்கு எப்படி பதில்
சொல்ல முடியும் என்று வியந்த போது #கலைஞர் மேடைக்கு வந்தார்.
பேராசிரியர் அறவாணன் ஐந்து குணங்களைச் சொன்னார். A-B-C-D-E என்று வரிசைப்படுத்தினார். ஆறாவது எழுத்தை விட்டு விட்டார். அதுதான் F,

F for Feeding. என்னை Feed செய்தவர் கள் #அண்ணா-வும், #பெரியார்-ரும் அதனால்தான் எனக்கு ஐந்து குணங்களும் வந்தன என்று சொன்னார்.
Read 4 tweets
1971 ல் தலைவர் #கலைஞர் முதலமைச்சராய் இருந்த காலம்
அவரைப் பற்றி ஒரு மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது.

அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப்பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி (ராசகோபாலச்சாரி),என்ற ஒரு மூன்றாம் தர வக்கீல்!
முதல்வர் பதவியிலிருக்கும் #கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் கலைஞர் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். #கலைஞர் செய்யவில்லை.

ஆனால் கடற்கரையில்
👉👉தந்தை பெரியார் கூட்டம் போட்டு ராசகோபாலாச்சாரியை மிகக்கடுமையாக கண்டித்தார்.
ராசகோபாலாச்சாரியின் சொத்து குறித்தெல்லாம் விவராமாய்க் கேள்விகள் கேட்டார் பேச்சின்
உச்ச கட்டத்தில்,

“இந்தக் கேள்வியைக் கேட்கிற நான் யாரோ எவரோ அல்ல;
தெருப்பொறுக்கி அல்ல;
பச்சி காணா அல்ல;
இந்த ராசகோபாலாச்சாரிக்கு மாதம் இருநூற்றைம்பது ரூபாய் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து,👇👇
Read 14 tweets
#கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் .....

1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் பெரும்செல்வந்தர் #பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் #திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள் இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.
Read 19 tweets
மதுவிற்பனை பெருக.. குடிகாரர்கள் பெருக யார் காரணம்?

(1) 1971 ல் திறக்கப்பட்டு 1974 ல்
கலைஞரால் மூடப்பட்ட மதுக்கடைகளை 1981ல் மீண்டும் திறந்தது யாரு?

#எம்ஜிஆர்*

(1)

twitter.com/i/spaces/1djGX…
(2)1982-83 ல் MGR அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது யார் ?
#எம்ஜிஆர்*

3) 1983 டாஸ்மாக் தொடங்கியது யார்?

#எம்ஜிஆர்*

(2)
4) வெளிநாட்டு மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமங்களை யார்?

#எம்ஜிஆர் *

5) கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக 1989ல் மலிவு விலை சாராயத்தை கொண்டு வந்தது யார்?

#கலைஞர்*

(3)
Read 6 tweets
ஆம் எனக்கு கலைஞரை பிடிக்காது!

பள்ளி காலங்களிலும் சரி, கல்லூரியின் ஆரம்ப நாட்களிலும் சரி இயல்பாகவே சமூகத்தின் பெரும்பான்மை மக்களால் காரணமின்றி திணிக்கப்படும் கலைஞர் எதிர்ப்பு மனநிலைக்கு நடுவிலேயே வளர்ந்தேன். அரசியல் பற்றிய விழிப்புணர்வு சுத்தமாக இருந்ததில்லை,
எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை, எந்த அரசியல் விவரங்களும் தெரியாது, ஆனால் கலைஞரை பிடிக்காது. ஜெயலலிதாவை இரும்பு பெண் என்பேன். எம்ஜிஆரை பொன்மனச்செம்மல் என்பேன். கலைஞரை திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்பேன். திமுகவை திருடர் முன்னேற்ற கழகம் என்பேன், இப்படித்தான் இருந்தேன்.
ஈழத்தை பற்றிய புரிதலும் இருக்கவில்லை, ஒரு மாநில முதல்வரின் அதிகாரங்கள் என்ன என்பதும் தெரிந்ததில்லை. ஏதோ அவரே முன்னின்று சென்று லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றதை போல பேசிவந்தேன். அவரின் அரைநாள் உண்ணாவிரதத்திற்கான காரணம் என்ன என்பதை கூட அறிந்திருக்காமல் கிண்டல் செய்து வந்தேன்.
Read 20 tweets
#அறிவோம்ஈழம்

1986 இல் #LTTE க்கும் #TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் #சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் #பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே #EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு #புலிகளால் அழிக்கப்பட்டனர்.
தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE #பிரபாகரனால் கொல்லப்படவர்களில் சிலர்.
மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.

#சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட #கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார்.
Read 4 tweets
கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...

1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா பெரும் செல்வந்தரான
பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள்.
Read 20 tweets
கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.

1957 ஆம் ஆண்டு தனது
முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...

1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...

காமராஜர்  தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா  பெரும் செல்வந்தரான
பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள். இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார். தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில்
Read 18 tweets
*கரிகாலன் கட்டிய கல்லணை தெரியும். 1967 தொடங்கி, கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட காடம்பாறை அணை பற்றி தெரியுமா?*

#காடம்பாறை குகை ஒரு செயற்கை குகை.

திமுக உருவாக்கிய ஆரம்பகால திட்டங்களில் இதுவும் ஒன்று.

அதன் வரலாறு இதோ:

வால்பாறை உச்சியில் உள்ள "#நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால்.
ஆனால் இதனால் தமிழகத்திற்கு யாதொரு பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான major source.
அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற #கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார்.
Read 8 tweets
*ஆசியாவின் முதல் ஈரடுக்குப் பாலம் எங்குள்ளது என்று நேற்று என்னிடம் கேட்டிருந்தால் சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் என்றுதான் கூறி இருப்பேன்.*

*நம்ம நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவ்வளவு அவநம்பிக்கை.*

*உண்மையில் அது நமது நாட்டில், நமது மாநிலத்தில்தான் இருக்கிறதாம்.*
*இப்படிச் சொன்னவுடன் "எவனாவது வெள்ளைக்காரன் கட்டியிருப்பான்" என்ற நினைப்பு அடுத்து தோன்றும்*

*அதுவும் தவறுதானாம். எனில் கட்டியது யார்?*

*பாலம் கட்டுறதுனா கலைஞரை விட்டா வேறு யாரு?*
*ஆம். 1973ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது திருநெல்வேலியில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு.*

*திருக்குறளைப் போல ஈரடுக்குல இருக்கிறதால அந்தப் பாலத்துக்கு "திருவள்ளுவர் பாலம்" என்ற பெயரையும் கலைஞர் சூட்டியுள்ளார்.*
Read 4 tweets
ஒருமுறை கலைஞர் இல்லத்திற்கு கலைவாணர் வந்திருந்தார். கலையுலகம், அரசியல் என பலவற்றையும் பேசி அகமகிழ்ந்தபடி இருந்தனர். திடீரென்று கலைவாணர் "நடிப்புத் தொழில் எனக்குக் கொஞ்சம் சலிப்பாகிவிட்டது. உங்களைப் போல, அண்ணாவைப் போல நானும் ஒரு எழுத்தாளராக ஆசை.
1/n
இதுபற்றி #கல்கி அவர்களிடம் கேட்டபோது, மூன்று மை தேவை என்றார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

"குறைந்தபட்சம் ஆறு மையாவது தேவைப்படும்" என்றார் #கலைஞர்.

"எது எது"

"கலைவாணருக்கு முதலில்
'#தனிமை'

பின்பு
'#பொறுமை'

நம்மிடம் இருக்க வேண்டியது
'#வாய்மை'
2/n
துவக்கும்போது
'#எளிமை'

எழுத்தில் காட்ட வேண்டியது
'#வளமை' அல்லது '#புலமை'

அதற்குமேலாக,
'#பேனாமை'

என்றார் கலைஞர்.

" எனக்குச் சினிமாதான் சரி வரும்" 😅எனச் சிரித்துக்கொண்டே விடைபெற்றார் #கலைவாணர்.
Read 3 tweets
#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.

இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
Read 25 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!