Discover and read the best of Twitter Threads about #tamilhollywoodreviews

Most recents (24)

[Animation - Movie ] Up - 2009

என்ன ஒரு அழகான படம் !!!

அருமையான உணர்வுப்பூர்வமான திரைப்படம்.

அனிமேஷன் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இறந்த மனைவியின் நிறைவேறாத ஆசையை பூர்த்தி செய்ய பாடுபடும் முதியவரின் கதை.

நல்ல ஒரு Adventure, Comedy movie.

#tamilhollywoodreviews #Tamil ImageImage
அனிமேஷன் மூவி எல்லாம் சின்ன பசங்களுக்குனு பார்க்காமல் விட்டுறாதீங்க...

76 வயது முதியவர் கார்ல் தனியாக வசித்து வருகிறார். மனைவியின் ஆசை பேரடைஸ் ஃபால்ஸ் இடத்தில் மலை உச்சியில் வீடு கட்டி வாழ்வது. ஆனால் பல காரணங்களினால் முடியாமல் போகிறது. ஆசை நிறைவேறாமலே இறந்து போகிறார்.
பல நெருக்கடி காரணமாக வீட்டை காலி செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார். மனைவியுடன் பல வருடங்கள் வாழ்ந்த வீட்டை பிரிய மனமில்லை.

ஒரு நன்னாளில் ஆயிரக்கணக்கான ‌பலூன்களை வீட்டின் மீது கட்டி வீட்டோடு பெயர்த்து கொண்டு பாரடைஸ் ஃபால்ஸ் நோக்கி கிளம்புகிறார். Image
Read 17 tweets
Widows - 2018
இந்த படத்தை பார்க்க முக்கிய காரணம் இயக்குனர் மற்றும் நடித்த நடிகைகள்.

IMDb 6.9
தமிழ் டப் இல்லை ‌
படம் ஸ்லோ தான்.

12 Years a slave என்ற அகாடமி அவார்டு வாங்கிய திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் Steve McQueen -ன் படைப்பு தான் இந்த படம்.

#tamilhollywoodreviews #Tamil
நடிகைகள் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார்.

Michelle Rodriguez - இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious) கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் .
Elizabeth Debicki - இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்
Read 20 tweets
[Re-post] [Korean] Midnight Runners - 2017

இது ஒரு காமெடி கலந்த அருமையான ஆக்ஷன் திரைப்படம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு காமெடி ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி.

IMDb 7.3
தமிழ் டப் இல்லை.
OTT ல் இல்லை.

#Tamil #tamilhollywoodreviews
கொரியன் போலீஸ் யுனிவர்சிட்டியில் படிக்கிறார்கள் இரண்டு நண்பர்கள். குடும்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக போலீஸ் ட்ரைனிங்கில் சேர்ந்திருப்பது பின்னர் தெரிய வருகிறது
ஒரு நாள் இரவில் பார்ட்டி முடித்து வெளியே வரும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணை கடத்துகிறது ஒரு கும்பல்
இருவரும் வேனை விரட்ட அது கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இருவரும் கல்லூரியில் படித்ததை செயலில் காட்டி அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.

விசாரணையில் பிண்ணனியில் கொடூரமான மெடிக்கல் மாஃபியா இருக்கிறது என தெரியவருகிறது. போலீஸ் கேஸ் மற்றும் ஆதாரம் இல்லை என்கிறது.
Read 17 tweets
The Crazies - 2010

நிறைய Horror படங்களை IMDb வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருந்தேன். அதிலிருந்து சமீபத்தில் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று.

இதை முழுவதுமாக Zombie படம் என்றும் சொல்ல முடியாது.

IMDb - 6.5
தமிழ் டப் இல்லை.

#Tamil #tamilhollywoodreviews #horror
எப்பவுமே சிட்டியில் நடக்கும் கதைகளை விட சின்ன ஊருக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடித்த ஒன்று. அது மாதிரி ஒரு படம் தான் இது.

ஒரு சின்ன விவசாய கிராமம் . பேஸ் பால் மேட்ச் நடக்கும் சமயம் ஒருத்தன் கையில் Shot Gun ஓட உள்ள வர்றான்.
ஹீரோ அந்த ஊர் தலைமை போலீஸ். அவர் மற்றும் அவரோட அஸிஸ்ட்டன்ட் ரெண்டு பேரும் வார்னிங் கொடுத்தும் வெளியே போகாததால் வேறு வழி இல்லாமல் சுட வேண்டி இருக்கிறது.

இன்னொருத்தன் பொண்டாட்டி பிள்ளைகளை வீட்டுக்குள் போட்டு தீயை வைத்து கொளுத்திக் கொல்கிறான்.
Read 18 tweets
[Korean] The Chaser - 2008

The Wailing படம் பார்த்த ‌பின் அந்த பட இயக்குனர் எடுத்த மற்ற படங்களை பார்க்கும் ஆர்வம் வந்து பார்த்த படம் இது.

ஒரு சீரியல் கில்லரை பிடிப்பதை பற்றிய பரபரப்பான திரைப்படம்.

IMDb 7.6
தமிழ் டப் இல்லை.

#tamilhollywoodreviews #Tamil #korean
#killer ImageImage
ஹீரோ முன்னாள் போலீஸ் ஆனால் இப்போது பெண்களை வைத்து தொழில் செய்யும் ஒரு புரோக்கர். தொடர்ச்சியாக அவனிடம் வேலை செய்யும் சில பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அதனால் பணக்கஷ்டத்தில் இருக்கிறான்.

ஒரு கஸ்டமரிடம் இருந்து பெண் வேண்டும் என அழைப்பு வருகிறது.
தன்னிடம் மிச்சம் உள்ள பெண்களில் ஒருவரை அனுப்புகிறான்.

அனுப்பிய சிறிது நேரத்தில் காணாமல் போன அனைத்து பெண்களும் அந்த கஸ்டமரிடம் தான் கடைசியாக சென்று உள்ளனர் ‌என்பதை கண்டுபிடிக்கிறான்.

அந்த கஸ்டமரை கணடு பிடிக்க தானகவே விசாரணையில் இறங்கி கண்டு பிடித்து விடுகிறான். Image
Read 18 tweets
Ready Player One - 2018

பிரபல இயக்குனர் Stephen Spielberg இயக்கத்தில் வந்த Sci Fi , Adventure கலந்த ஆக்ஷன் படம்.
கொஞ்சம் பெரிய படம் தான் ஆனால் ரொம்ப ஃபோர் அடிக்கவில்லை. கிராபிக்ஸ் சூப்பரா இருக்கும்.

நல்ல டைம் பாஸ் மூவி

IMDb: 7.4
தமிழ் டப் இல்லை.

#tamilhollywoodreviews #Tamil ImageImage
படம் நடப்பது 2045 ல . மக்கள் நிம்மதியாக வாழ சூழல் இல்லாததால் பெரும்பாலான மக்கள் Oasis எனப்படும் Virtual உலகத்தில் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார்கள்.

Oasis உலகத்தை உருவாக்கிய விஞ்ஞானி அதிபுத்திசாலி. அவர் இறக்கும் முன்பு ஒரு அறிக்கை விட்டுவிட்டு இறந்து விடுகிறார். Image
Oasis - ல் ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்து உள்ளதாகவும் அந்த ரகசியத்தை அடைய மூன்று சாவிக்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். அந்த ரகசியத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு தன் சொத்துக்கள் மற்றும் Oasis ன் முழு உரிமையும் கொடுக்கப்படும் என்கிறார். Image
Read 19 tweets
[Documentary] Turning Point : 9/11 And The War On Terror

இது ஒரே மினி டாக்குமெண்டரி சீரிஸ் ‌‌

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் பற்றிய டாக்குமெண்டரி.

#tamilhollywoodreviews #Tamil #September11 #TurningPoint911 #turningpointnetflix #TurningPoint Image
இந்த டாக்குமெண்டரியின் பெரிய ப்ளஸ் என்னவென்றால் அவர்கள் உபயோகித்து இருக்கும் Live Footage , real audio recordings. 

தாக்குதல் நடந்த நேரம், இரண்டு கோபுரங்களும் சரியும் தருணம் போன்ற காட்சிகள் நமக்கு இத்தனை வருடங்கள் கழித்தும் அதிர்ச்சி அளிக்கிறது.
உயிர் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்த பின் பேசும் போன் கால்களுடைய ரெக்கார்டிங்ஸ் கேட்கும் போது ரொம்பவே பாவமாக இருக்கிறது. 

தொடர் 9/11 பற்றி மட்டும் பேசாமல் எப்படி அமெரிக்காவுக்கும் அல்கொய்தா, தாலிபான்கள் போன்ற அமைப்புகளும் ஏன் உரசல் ஆரம்பமானது.
Read 17 tweets
Wonder - 2017

என்ன ஒரு அழகான Feel good திரைப்படம்.
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

இந்த மாதிரி ஃபீல் குட் படங்களை பார்ப்பது மனதிற்கு ரொம்பவே இதமாக இருக்கும்.

Julia Roberts , Owen Wilson முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் .

#tamilhollywoodreviews #Tamil Image
சில Genes 🧬 குறைபாட்டால் முகம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் சிறுவன். மற்றவர்கள் கிண்டல் பண்ணுவாங்க என்று 4 வது வகுப்பு வரை வீட்டிலேயே படிக்க வைக்கின்றனர் பெற்றவர்கள். வெளி உலகோடு கலக்க வேண்டும் என 5 வகுப்புக்கு பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள்.
பள்ளிக்கூடத்தில் அந்த சிறுவன் எப்படி செட்டில் ஆனான் என்பதை சுற்றி நகர்கிறது படம்.

படத்தின் ஹீரோ சிறுவன் (August - Auggie) க்கு ரொம்பவே தாழ்வு மனப்பான்மை. அம்மா , அப்பா மற்றும் அக்கா என அழகான மற்றும் பாசத்தை பொழியும் குடும்பம்.
Read 17 tweets
Get Out - 2017

மர்மம் கலந்த ஹாரர் படம்.

ஆனால் எனக்கு என்னமோ இந்த படம் சைக்கலாஜிகல் திரில்லர் மாதிரி தான் தெரியுது.

படம் ஸ்லோ பர்னர் வகை. கடைசி 30 நிமிடங்கள் படம் ஸ்பீடு எடுக்கும் . அதற்கான பில்டப் தான் அதற்கு முந்தைய பகுதி படம்.
#tamilhollywoodreviews #Tamil #horrormovie
அதற்காக ஃபோர் அடிக்கும் அளவுக்கு இல்லை. செமயான engaging Screenplay, வித்தியாசமான கேரக்டர்ஸ் மற்றும் ஹாரர் காட்சிகள் வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்.

படத்தின் கதையை பார்க்கலாம்.
முதல் காட்சியில் ஒருத்தனை முகமூடி போட்ட ஒருத்தன் அடிச்சு டிக்கி உள்ள போட்டு கடத்திட்டு போறான்.
இன்னொரு பக்கம் கருப்பினத்தை சேர்ந்த ஹீரோ , வெள்ளையினத்தை சேர்ந்த ஹீரோயின். இருவரும் ஒரு வார இறுதியில் ஹீரோயினின் வீட்டுக்கு போகிறார்கள்.

ஹீரோவோடு ஒரே ப்ரெண்ட் போகாதடா அவனுக உன்னை செக்ஸ் அடிமை ஆக்கிறுவாங்க என்று கூறி பயமுறுத்துகிறான்.
Read 19 tweets
Promising Young Women - 2020
இது ஒரு ரிவென்ஜ் படம். ஆனா நேரடியாக வெட்டு , குத்து என இருக்காது. 

ஹுரோயின் மெடிக்கல் காலேஜ் ட்ராப் அவுட். ஏதோ ஒரு பிரச்சினையில் தோழி தற்கொலை செய்து கொள்ள இவரும் அந்த காலகட்டத்தில் வெளியே வந்து விடுகிறார். 

#tamilhollywoodreviews #Tamil ImageImage
வாழ்க்கையில் ஒரு பிடிமானமும் இல்லாமல் ஒரு காபி ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். 

இன்னொரு முக்கியமான வேலை இரவு நேரத்தில் பாரில் போதையில் இருப்பது போல் நடிப்பார். தப்பான எண்ணத்தோடு உதவி செய்ய வருபவர்களை கேவலப்படுத்தி அனுப்புவது. 

இவ்வாறு போய்க்கொண்டு இருக்கிறது வாழ்கை..
இந்நிலையில் அவளுடன் காலேஜ் ஜில் ஒன்றாக படித்தவன் மறு அறிமுகமாகிறான்.

இருவருக்கும் பிடித்து போக லவ் பண்ண ஆரம்பித்து வெளியே சுற்ற ஆரம்பிக்கிறார்கள். 

ஒரு நாள் பேச்சுவாக்கில் தனது தோழியின் தற்கொலைக்கு காரணமானவன் வெளிநாட்டில் இருந்து அவனுடைய திருமணத்திற்காக வருவது தெரிய வருகிறது
Read 18 tweets
Palm Springs - 2020

இது ஒரு நல்ல ரொமான்ஸ் , காமெடி & Fantasy படம். 

Time Loop கான்செப்ட இருப்பதால் Sci Fi படம் என்று கூட சொல்லலாம். 

ஆக்ஷன் படங்களில் டைம் லூப் பார்த்து இருக்கிறோம் ஆனால் ரொமான்ஸ் படங்களில் டைம் லூப் fresh ஆன கற்பனை. 

#tamilhollywoodreviews #Tamil Image
நன்றாகவே workout ஆகி இருக்கிறது இந்த படத்தில். 

இப்ப படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். 

முன் பின் அறிமுகம் இல்லாத ஹீரோ ஹீரோயின் ஒரு கல்யாணத்துக்கு போறாங்க. கல்யாணத்துல பழக்கமாகி தனியா(?) இருப்போம் என்று குகைகள் இருக்கும் ‌பகுதிக்கு செல்கிறார்கள்.
அப்போது திடிரென ஒருவன் வந்து அம்பு எய்து ஹீரோவை கொல்ல முயற்சிக்கிறான்.  ஹீரோ ஒரு குகைக்குள் ஓடுகிறான் , வராதே என பலமுறை சொல்லியும் ஹீரோயின் அவன் பின்னாடியே குகைக்குள் செல்கிறாள்.

உள்ளே ஒரு பெரிய லைட் அவர்களை தன்னுள் இழுத்துக் கொள்கிறது. Image
Read 19 tweets
Lone Survivor - 2013

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இராணுவ ஆக்ஷன் திரைப்படம்.

இராணுவம் பற்றிய திரைப்படம் என்பதால் படத்தின் ஆரம்பத்திலேயே அமெரிக்க ராணுவத்தில் கொடுக்கப்படும் கடும் பயிற்சிகள் டைட்டிலோடு காட்டப்பட்டுகிறது

#Tamil #tamilhollywoodreviews Image
4 பேர் கொண்ட ஒரு சின்ன படைவீரர்கள் குழு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிக்குள் செல்கிறது. தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவன் ஒருவன் ஆன ஷா அந்த மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கிறான். ஷாவை உயிருடன் பிடிப்பது அல்லது கொல்வது இந்த இராணுவ வீரர்களின் மிஷன்.
மிகவும் கடினமான தட்பவெப்ப நிலை மற்றும் சூழ்நிலையில் நால்வரும் மலைப்பகுதியில் விமானம் மூலமாக இறங்கி கால்நடையாக கிராமத்தை நோக்கி நகர்கின்றனர். இவர்களுக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சினை தங்களது கமாண்ட் சென்டருடன் தொடர்பு கொள்வது. மலைப்பகுதியில் சிக்னல் கிடைக்கால் போய் விடுகிறது.
Read 17 tweets
Panic Room - 2002

David Fincher டைரக்ட் பண்ணுன படம்.

படத்தோட கதை ரொம்பவே சிம்பிள்.

ரீசென்ட்டா Divorce ஆன ஹீரோயின் தனது சர்க்கரை நோயாளியான மகளுடன் புதிதாக ஒரு வீடு வாங்கி குடி வருகிறார்.

அந்த வீட்ல எதையும் தாங்கும் ஒரு Safe room இருக்குது.

#tamil #tamilhollywoodreviews
அந்த Safe Room ல பழைய ஓனர் விட்டுட்டு போன பல லட்சம் டாலர் மதிப்புள்ள பொருள்கள் இருக்குது.

இதை தெரிஞ்சுகிட்ட 3 பேர் அதை கொள்ளையடிக்க வறாங்க.

அம்மாவும் பொண்ணும் தப்பிக்க அதே Safe Room ல போய் தஞ்சம் அடைகிறார்கள்.

வெளியே தொடர்பு கொள்ள முடியாமல் இருவரும் தவிக்கிறார்கள்.
கொள்ளையர்களும் விடுவதாக இல்லை.

புதுச புதுசா பல வழிகளில் அந்த ரூமிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள்.

இது போக மகளுக்கு சுகர் பிரச்சினையால் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. எல்லாத்தையும் சமாளிக்கிறார் ஹீரோயின் Jodie Foster . மகளாக நடித்து இருப்பது Kristen Stewart.
Read 14 tweets
[Series] Fringe (2008 - 2013)

இது ஒரு மர்மம் கலந்த Sci Fi Thriller தொடர்.

மினி சீரிஸ் தான் பார்ப்பேன் என்பவர்கள் அப்படியே jump ஆகிருங்க..

இது மிகப்பெரியயய சீரிஸ். மொத்தம் 5 Seasons மற்றும் அதில் மொத்தம் சேத்து 100 எபிசோட்.

#Tamil #tamilhollywoodreviews
Lost தொடர் புகழ் J.J. Abrams அவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த தொடரின் நீளம் காரணமாக எதை பற்றி சொல்வது என்று தெரியவில்லை. அதனால் மைய கரு மற்றும் முக்கியமான கதாபாத்திரங்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.

இந்த தொடர் முழுவதும் Fringe Division எனும் FBI ன் மற்றொரு அங்கத்தை பற்றியது.
Fringe Science பற்றிய வழக்குகளை பற்றி விசாரணை செய்கிறார்கள்.

அது என்ன Fringe Science?
இது நம்முடைய வழக்கமான அறிவியலுக்கு ‌அப்பாற்பட்டது. உதாரணமாக இறந்து போனவர்களின் மூளையை தொடர்பு கொண்டு பேசுவது, பேரலல் யுனிவர்சஸ் பற்றிய ஆராய்ச்சி,
Read 19 tweets
Minari - 2021

இந்த வருடம் ஆஸ்கார் விருது (சிறந்த துணை நடிகைக்கான) வாங்கிய திரைப்படம் .

அமெரிக்க திரைப்படம் என்றாலும் கொரிய குடும்பத்தை பற்றிய படம் என்பதால் பெரும்பாலும் கொரிய மொழி பேசப்படுகிறது.

#tamilhollywoodreviews #Tamil
என்ன தான் பிரச்சினை வந்தாலும் குடும்பம் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தும் படம் இது.

1980 - களில் தென்கொரியாவில் இருந்து பிழைப்புக்காக அமெரிக்காவிற்கு வரும் ஒரு கொரிய குடும்பத்தின் வாழ்கையின் ஒரு பகுதியை படமாக எடுத்து இருக்கிறார்கள்.
படத்தின் ஹீரோவுக்கு பெரிய பண்ணை அமைத்து அதில் கொரிய காய்கறிகள், பழங்களை விளைய வைத்து அதை விற்று காசு பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு பெரிய இடத்தை வாங்கி குடும்பத்துடன் அதன் அருகே குடி வருகிறான். ஆனால் மனைவிக்கு அங்கு வருவதில் பெரிதாக உடன்பாடு இல்லை.
Read 18 tweets
Nobody - 2021

இந்த படத்தை பற்றி பார்க்குறதுக்கு முன்னாடி ... உங்களுக்கு ஆக்ஷன் திரில்லர் படங்கள் பிடிக்கும் என்றாலோ, John Wick series படங்கள் பிடிக்கும் என்றாலோ யோசிக்காமல் படத்தை பாருங்கள்.

தரமான ஆக்ஷ்ன் என்டர்டெயின்மென்ட் கேரண்டி. 👍👍

#tamilhollywoodreviews #Tamil
ஹீரோ ஒரு குடும்பஸ்தன் . இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வம்பு தும்புக்கு போகாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள் பஸ்ஸில் தனியாக வரும் பெண்ணுக்கு உதவி செய்ய போய் ரஷ்ய கும்பலுடன் பகை ஏற்படுகிறது.

ரஷ்ய கும்பல் தலைவன் இவனை கொல்ல ஆள் அனுப்புகிறான்.
ஆனால் ஹீரோ எல்லாத்தையும் பிரிச்சு மேஞ்சு விடுகிறான்.
அப்புறம் என்ன வில்லன் குரூப்பை எப்படி போட்டுத்தள்ளுகிறான் என்பது மீத படம்.

படத்துல லாஜிக், கதை எல்லாம் பார்க்க கூடாது.

20 நிமிடங்கள் மெதுவாக போகிறது படம். பஸ்ஸில் நடக்கும் சண்டையுடன் படம் வேகம் எடுக்கிறது.
Read 16 tweets
District 9 (2009)
இது ஒரு வித்தியாசமான Sci Fi ஏலியன் படம்.
பெரும்பாலான படங்களில் ஏலியன்கள் புது விதமான ஆயுதங்களுடன் நம்மளை வைச்சு செய்யுங்க ‌

இதுலயும் வெப்பன்ஸ் எல்லாம் புதுசு தான் ஆன வந்த விண்கலம் ப்ரேக் டௌன் ஆகிறது.

#tamilhollywoodreviews #Tamil ImageImage
சோறு இல்லாம நோய்வாய்ப்பட்டு நிறைய ஏலியன்கள் செத்து போகின்றன.

மிச்சம் உள்ள ஏலியன்ஸ்க்கு ஒரு இடத்தை கொடுத்து படு கேவலமாக நடத்துது அரசாங்கம்.

ஒரு கட்டத்தில் அரசால் இந்த குடியிருப்புகளை நடத்த முடியாமல் ஒரு கார்ப்பரேட்டிடம் கொடுக்கிறார்கள்

அவர்களுக்கு ஏலியன்ஸ் ஆயுதங்கள் மேல் கண்.
ஆனால் ஆயுதங்கள் ஏலியன்ஸ் DNA உடன் Sync ஆகி இருப்பதால் அதுக மட்டுமே இயக்க முடியும்.

ஹீரோ ஒரு விபத்தின் காரணமாக ஏலியன்ஸ் வெப்பன்ஸ் இயக்குற ஆற்றல் பெறுகிறார்.

அப்புறம் என்ன விஷயம் தெரிஞ்ச கம்பெனி ஹீரோவை வெட்டி ஆராய்ச்சி பண்ணுனா அந்த டெக்னாலஜி கெடச்சுரும்னு விரட்டுது.
Read 17 tweets
[Documentary] Seaspiracy -2021

சிலர் சுற்றுச்சூழலை பாதுகாப்பா வைக்கனும்னு நினைப்பார்கள். அதுக்காக ரொம்ப மெனக்கெடுவார்கள். வாட்டர் பாட்டில் , துணிப்பை கொண்டு போவார்கள்.

அது போல கடல் உயிரினங்கள் மற்றும் கடல் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர் Ali Tabrizi

#tamilhollywoodreviews #Tamil Image
அதிலும் குறிப்பாக திமிங்கிலங்கள் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். 

திமிங்கிலங்கள் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம் நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் ப்ளாஸ்டிக்கை கூட உபயோகப் படுத்தாத மனுஷன். ஹோட்டல் போன கூட மரத்தால் செஞ்ச கரண்டிய எடுத்துக் கொண்டு போகிறார்.
இவருக்கு ஜப்பான் நாட்டில் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் கொல்லப்படுவதாக கேள்விப்பட்டு வீடியோ எடுக்க போகிறார்.
அங்கு நடப்பது கொடூரமாக உள்ளது
டால்பின்களை கொல்கிறார்கள்.  அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் டால்பின்கள் நிறைய மீன்களை சாப்பிடுவதால் எங்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை.
Read 17 tweets
[Greek] Dogtooth - 2007
என்னையா படம் எடுத்து வைச்சு இருக்கீங்க.‌இது மாதிரி Weird ஆன ஒரு படத்தை இது வரைக்கும் பார்த்ததே இல்லை.எப்படி தான் இப்படி எல்லாம் படம் எடுக்குறானுகளோ

Next என்ன மாதிரியான லூசுத்தனம் பண்ணுவாங்கனு எதிர்பார்ப்பில் படம் நகர்கிறது

#tamilhollywoodreviews #Tamil ImageImage
ஒரு குடும்பம் அப்பா, அம்மா, 2 டீன் ஏஜ் மகள்கள் மற்றும் மகன். அனைவரும் ஒரு மிகப்பெரிய வீட்டில் வசிக்கிறார்கள். ஆனால் தந்தை மட்டுமே வெளியே போய் வருவார். மற்ற அனைவரும் கிட்டத்தட்ட சிறைக்கைதிகள் போல உள்ளனர். வெளி உலகத்துடன் தொடர்பு சுத்தமாக கிடையாது.
பூனை தான் மனிதர்களை கொல்லும் கொடூரமான விலங்கு என நம்ப வைக்கப்படுகிறார்கள்.

Dogtooth எனப்படும் பல் விழுந்தால் தான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் எனவும் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

மகனின் உடல் தேவைகளை தீர்க்க வாரம் ஒருமுறை ஒரு பெண்ணை கூட்டி வருகிறார் அப்பா 🤦
Read 15 tweets
Mother - 2017

இந்த படத்தை பத்தி என்ன சொல்ல. முதல்ல இந்த படத்தை பார்க்க ரொம்பவே பொறுமை வேண்டும்.

என்ன சொல்ல வரானுக என்று புரியாது. பாதி காட்சிகளை நம்ம முடிவுக்கு விட்ருப்பாரு இயக்குனர்.
#tamil #Tamilhollywoodreviews #mother
ஒரு எழுத்தாளர் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் தனியாக காட்டிற்குள் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். ஒரு நாள் இரவு தங்க இடம் கேட்டு ஒருவர் வருகிறார் அவருக்கு இடம் கொடுக்கிறாரர்கள். அடுத்த நாள் அந்த மனிதனின் மனைவி வருகிறார். அப்புறம் அவர்களது இரண்டு மகன்கள் வருகிறார்கள்.
சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு முற்றி கொலையில் முடிகிறது. மனைவி மட்டும் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் ஹாஸ்பிடல் போய்விடுவார்கள்.

அதுக்கு அப்புறம் பல கொடுரமான சம்பவங்கள் நடந்தேறும். அது என்ன என்று படத்தில் பாருங்கள்.
கடைசியில் ரொம்பவே டிஸ்டர்பிங்காக இருக்கும்.
Read 12 tweets
Homefront - 2013
ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் Jason Statham நடித்து 2013 -ல் வந்த ஆக்ஷன் படம்
இது போதாதென்று திரைக்கதை எழுதியவர் Sylvester Stallone

படத்தின் கதை பல வருடங்களாக அடித்து துவைத்து எடுக்கப்பட்ட குடும்பத்தை கெட்டவர்களிடம் காப்பாற்றும் கதை தான்
#tamil
#tamilhollywoodreviews
ஹீரோ முன்னாள் போதைப்பொருள் தடுப்பு அதிரடி போலீஸ். மனைவி இறந்த பின் குழந்தையுடன் ஒரு கிராமத்தில் செட்டில் ஆகிறார். அங்கு ஏற்பட்ட சின்ன உரசல் விஸ்வரூபம் எடுத்து அதன் காரணமாக அவனது பழைய எதிரி அடியாட்கள் + பயங்கரமான ஆயுதங்களுடன் பழிவாங்க கிராமத்துக்கு வருகிறான்.
அந்த கும்பலிடம் இருந்து எப்படி இருவரும் தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
எனக்கு என்னமோ இத லைட்டா டிங்கரிங் பண்ணி தான் தெறி படம் எடுத்த மாதிரி தெரியுது. இந்த படத்துலயும் ஒரு டீச்சர் வருது 😁
நல்ல டைம் பாஸ் படம் கண்டிப்பாக பாருங்கள். Action sequences எல்லாம் நல்லா இருக்கு
Read 12 tweets
Collateral - 2004

இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். ஒரே இரவில் நடப்பது போன்ற படம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத படம்.

அப்பாவி வாடகை டாக்ஸி ஓட்டுனர் இருக்காரு.

ஒரு நாள் இரவு நல்ல டீசென்ட்டா ட்ரஸ் போட்ட ஒருத்தர் டாக்ஸியில் ஏறுகிறார்.

#tamilhollywoodreviews #Tamil
சிட்டில நிறைய இடத்துல வேலை இருக்குனு சொல்லி மொத்த நைட்டுக்கும் டாக்ஸியை வாடகைக்கு எடுக்கிறார்.

போற எடுத்துல எல்லாம் டொப் டொப்னு யாரையாவது போட்டுத்தள்ளுறார்.

இதுல நடுல சிக்குன டாக்ஸி ட்ரைவர் நிலைமை என்ன? அவன்ட்ட இருந்து எப்படி தப்பிச்சார்னு படத்தில் பாருங்கள்.
@PrimeVideoIN
#tomcruise - சாக்லேட் பாய் கெட்டப்ல பார்த்து இருப்போம். இதுல ஸ்டைலிலஷ் + கொடூரமான கொலைகாரனா கலக்கி இருக்கிறார். #jamiefoxx - அப்பாவி ட்ரைவராக நல்ல நடிப்பு.

IMDb 7.4
ப்ரைமில் இருக்கிறது, தமிழ் டப் இல்லை.
DM for link
Full Review tamilhollywoodreviews.com/2020/10/collat…

கண்டிப்பாக பாருங்கள்.
Read 11 tweets
[Korean] The Host - 2006
Parasite, Mother, Okja போன்ற அருமையான படங்களை இயக்கிய Bong Joon Ho வின் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த திரைப்படம் தி ஹோஸ்ட்.

திடீரென ஒரு வித்தியாசமான மிருகம் கடலுக்குள் இருந்து வெளியே வருகிறது.
#Tamil #tamilhollywoodreviews
வந்த வேகத்தில் கடற்கரையில் உள்ளவர்களை கொன்று குவித்து விட்டு ஒரு சிறுமியை தூக்கிச் சென்று விடுகிறது.

இந்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பம் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் படம்.

சிறுமியை காப்பாற்றினார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
அப்படியே அரசியல் , சோசியல் என கொஞ்சம் மெஸேஜ்
சொல்லி இருப்பார் இயக்குனர். Horror , Sentiment மற்றும் காமெடி என அனைத்தையும் கலந்து கொடுத்து இருப்பார் இயக்குனர்.
கிராஃபிக்ஸ் மிருகம் செமயாக இருக்கும்.

ஹீரோயிசம் இல்லாத பக்காவான படம்.

குடும்பத்துடன் பார்க்கலாம். தமிழ் டப் உள்ளது.

DM for link.
IMDb 7.1
Worth Watching..
Read 10 tweets
[Indonesian] The Night Comes For Us - 2018
Raid , Raid 2 படங்கள் பார்த்து இருக்கிறீர்களா ? அது பிடிக்கும் என்றால் யோசிக்காமல் இந்த படத்தை பாருங்கள். ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பக்காவான ஆக்ஷன் படம். ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் தாறு மாறாக இருக்கும்.

#tamilhollywoodreviews #Tamil Image
ஒரு பெரிய கொடுரமான கடத்தல் கும்பல். ஹீரோ அதில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அடியாள். ஒரு பிரச்சினையில் ஒரு கிராமத்தையே அத்திப்பட்டி ஸ்டைலில் காலி பண்ணுகிறது ஹீரோ குரூப்
ஒரு சிறுமியை கொல்ல வேண்டி வருகிறது. அந்நேரத்தில் திடீர் என திருந்திய ஹீரோ தனது ஆட்கள் அனைவரையும் கொல்கிறார்
கடுப்பான Cartel இருக்குற அடியாட்கள் அனைவரையும் ஹீரோ+ சிறுமியை கொல்ல அனுப்புகிறது. இவர்களிடம் இருந்து தப்பித்து சிறுமியை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்

சண்டை எல்லாம் செம அதுவும் Raid 2 படத்தில் சுத்தியல் வச்சுகிட்டு ஒரு பொண்ணு வரும் . அந்த பொண்ணுக்கு 2 தரமான fight
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!