Discover and read the best of Twitter Threads about #TamilHollywoodRecommendations

Most recents (14)

[Re-Post] Cold Skin (2017)

இது 1914 - ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் நடக்கும் சம்பவங்களை பற்றிய திகில் திரைப்படம்.

வித்தியாசமான கதை கொண்ட திகில் படம்
#IMDb : 6.0
Available @PrimeVideoIN
#Tamil dub ✅
DM for download link.

#tamilhollywoodrecommendations
Friend (அது தான் அவர் பெயர்) ஒரு கப்பலில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கு வருகிறார். தட்பவெப்பநிலை, காற்றின் வேகம் , திசை ஆகியவற்றை ஆராய்ந்து பதிவு செய்வது தான் அவர் வேலை.

அந்த தீவில் ஒரு மர வீடு மற்றும் கலங்கரை விளக்கம் மட்டும் உள்ளது.
கலங்கரை விளக்கின் பாதுகாவலனாக முரட்டு குணம் கொண்ட Gruner என்பவன் இருக்கிறான்.

முதல் நாள் இரவில் கடலில் இருந்து வரும் உயிரினங்கள் கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றன. இந்த உயிரினங்கள் மனித உருவில் உள்ளன, கால்கள் மீன்களின் துடுப்பு போலவும், கூர்மையான பற்களுடன் நீல நிறத்தில் உள்ளன.
Read 10 tweets
Financial Crimes - Enron Scandal

உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம்.

#Financial #financialeducation #tamilhollywoodrecommendations
Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ‌‌இந்த கம்பெனியோட முக்கிய வியாபாரம் Energy business. .

நல்லா innovation எல்லாம் பண்ணி 90 s ல செம் லாபம் பார்த்த நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதெல்லாம் பார்த்து பாராட்டி பல அவார்டுகள் கொடுத்து இருக்கிறார்கள்.
America’s Most Innovative Company” by Fortune for six consecutive years: 1996–2001.

1992 ல அவங்களோட Accounting method'a (MTM) மாற்றிக்கொள்ள ரெகுலேட்டர்ஸ் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.
Read 10 tweets
[Re-Post] Promising Young Women - 2020

இது ஒரு ரிவென்ஜ் படம். ஆனா நேரடியாக வெட்டு , குத்து என இருக்காது.

#IMDb 7.5
#Tamil dub ❌
OTT ❌
Academy Winner - Best Screen Play

DM For Download Link

ஹுரோயின் மெடிக்கல் காலேஜ் ட்ராப் அவுட்.
#tamilhollywoodrecommendations
ஏதோ ஒரு பிரச்சினையில் தோழி தற்கொலை செய்து கொள்ள இவரும் அந்த காலகட்டத்தில் வெளியே வந்து விடுகிறார்.

வாழ்க்கையில் ஒரு பிடிமானமும் இல்லாமல் ஒரு காபி ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.

இன்னொரு முக்கியமான வேலை இரவு நேரத்தில் பாரில் போதையில் இருப்பது போல் நடிப்பார்.
தப்பான எண்ணத்தோடு உதவி செய்ய வருபவர்களை கேவலப்படுத்தி அனுப்புவது.

இவ்வாறு போய்க்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் அவளுடன் காலேஜ் ஜில் ஒன்றாக படித்தவன் அறிமுகமாகிறான்.

இருவருக்கும் பிடித்து போக லவ் பண்ண ஆரம்பித்து வெளியே சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.
Read 9 tweets
A Clockwork Orange - 1971

டைரக்டர் பெயரே போதும் இந்த படம் பார்க்க. பிரபல இயக்குனர் Stanley Kubrick இயக்கத்தில் வந்த Sci Fi படம் தான் இது.

IMDb 8.3 ( #114 out of top 250 movies)
Tamil Dub ❌
OTT ❌

எதிர்காலத்தில் நடக்கும் கதை.‌ஒரு வன்முறை குணம் கொண்ட இளைஞனின் கதை தான் இது.
ஹீரோ தனக்குனு ஒரு குரூப் வச்சுக்கிட்டு ஏதாச்சும் ஒரு வீட்டுக்கு போய் கொடூரமா கற்பழிப்புனு , கொலை , திருட்டுனு சுத்துறானுக. அவனுக்கு பிடிச்சது மூணு Sex, Violence & Beethoven music.

#TamilHollywoodRecommendations
குரூப்புக்குள் ஏறபட்ட சண்டை மட்டும் உள்குத்து வேலையால் ஹீரோ மட்டும் 14 வருட தண்டனை பெற்று சிறை செல்கிறான்.‌

கவர்மெண்ட் குற்றங்களை குறைக்க ஒரு புது ஆராய்ச்சி பண்ணுது .சீக்கிரமா ரிலீஸ் ஆகலாம் என ஐடியா பண்ணி தானே முன்வந்து அந்த சோதனைக்கு சம்மதிக்கிறான்.
Read 10 tweets
Greyhound - 2020

#TomHanks நடிப்பில் வெளிவந்த ஒரு War based movie.

இரண்டாவது உலகப் போர் சமயத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்.

#imdbrating 7.0
#Tamil டப் இல்லை ( சப் டைட்டில் உள்ளது)

#TamilHollywoodRecommendations
2 வது உலகப்போர் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் அமெரிக்க போர்க்கப்பல் தலைமையில் உணவுப் பொருட்கள், படை வீரர்கள் என மொத்தம் 37 கப்பல்கள் இங்கிலாந்து நோக்கி கிளம்புகிறது.

இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக 3 போர்க்கப்பல்கள் செல்கின்றன.
இந்த போர்க்கப்பல்கள் மற்றும் அனைத்து கப்பல்களிற்கும் தலைமை தாங்கும் கப்பல் தான் #Greyhound என பெயரிடப்பட்ட கப்பல்.

#Greyhound கப்பலின் கேப்டன் பொறுப்பில் Krause (#TomHanks) உள்ளார் ‌‌. மிகுந்த அனுபவசாலி என்றாலும் போர்க்காலத்தில் இதுவரை பணிபுரிந்தது இல்லை.
Read 19 tweets
Midnight Special - 2016

சிம்பிளான ஒரு Sci Fi திரில்லர் இது.

ஸ்பெஷல் பவர் கொண்ட சிறுவனை கவர்மெண்ட் மற்றும் சில எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் பெற்றோர்களின் கதை.

#imdbrating 6.6
#Tamil டப் ❌

#tamilhollywoodrecommendations
சிறுவன் Alton ஒரு Cult மாதிரியான அமைப்பில் தந்தையால் வள்ர்க்கப்படுகிறான். அவன் Prayer ன் போது சில நம்பர்களை தருகிறான் அது அமெரிக்கா மிலிட்டரியில் படு ரகசியமாக பாதுக்காக்கப் படும் தகவல்.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் போக வேண்டும்
என்கிறான் அந்த சிறுவன்.

தந்தை தனது நண்பன் ஒருவனை துணைக்கு கூட்டிக்கொண்டு மகனுடன் அந்த இடத்தை நோக்கி கிளம்புகிறார்.

இன்னொரு புறம் அமெரிக்க ராணுவம் மற்றும் அந்த Cult உறுப்பினர்கள் அந்த சிறுவனை கைப்பற்ற துடிக்கிறார்கள்.

யார் இந்த சிறுவன் ?
Read 18 tweets
Come As You Are - 2019
நல்ல காமெடி ட்ராமா படம்.

மூன்று physically challenged நண்பர்களின் Road Trip பற்றிய படம்.

#imdbrating 7
#Tamil டப் ❌
OTT #Netflix

படத்தோட கான்செப்ட் அடல்ட் கன்டென்ட். So 18+ ஆனால் ஆபாசக் காட்சிகள் இல்லை
#feelgood #comedy
#TamilHollywoodRecommendations ImageImage
Scotty வாழ்க்கை வீல் சேரில் தான். அவனால் தனியாக எதுவுமே செய்ய முடியாது. சாப்பாடு அவனுடைய அம்மா தான் ஊட்டி விட வேண்டும்.
25 வயது ஆகியும் இன்னும் கன்னிப்பையனாக இருக்கிறான்.

Matt - இன்னொரு Physically challenged person.

Mo- கண்பார்வை தெரியாமல் உள்ளவன்.
இவர்கள் மூவரும் ஒரு தெரபி சென்ட்ரில் சந்திக்கிறார்கள்.

Scotty க்கு தன்னைப்போல special persons களுக்காகவே ஒரு Prostitute Center கனடாவில் இருக்கின்றது என தெரிய வருகிறது.

மூன்று பேரும் தங்களுது வீட்டிற்கு தெரியாமல் ப்ளான் பண்ணி ஒரு நாள் கிளம்பி விடுகிறார்கள்.
Read 17 tweets
Enemy - 2013

இன்னும் Dennis Villeneuve's effect போகாம பார்த்த அவரோட இன்னொரு படம்.

படத்தோட ஒன் லைனர் நல்லா இருந்தது. Jake Gyllenhaal ஹீரோவாக நடித்து இருந்தார். அதுனால பார்த்த படம்.

IMDb 6.9

தமிழ் டப் இல்லை.

#TamilHollywoodRecommendations
#Tamil
#enemy ImageImage
ஹீரோ Adam ஒரு காலேஜ்ல ஹிஸ்டரி வாத்தியாரா இருக்காரு. ஒரு படம் பாக்குறப்ப அவரே மாதிரி ஒருத்தன் ஒரு சீன்ல வரான்.

ஒரு ஆர்வத்துலா அவன பத்தி ஆராய்ச்சி பண்ணி மீட் பண்ண போறாரு. அங்க சில வித்தியாசமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
அது என்னனு படத்துல பாருங்கள்.

ஒன் லைனர் நல்லா இருக்குல?
ஆன படத்துல எதுவுமே புரியவில்லை 😭😭. அங்க அங்க பெரிய சைசில் சிலந்தி பூச்சி வேற வருது.

எனக்கு இவங்க ரெண்டு பேரும் ஒரே ஆள் தானோனு டவுட்டா இருக்கு.. Split personality'a இருக்குமோ ???

யாருக்காவது இந்த படம் புரிந்து இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்கப்பா ..

படம் செம ஸ்லோ..
Read 16 tweets
[Korean] Okja - 2017
பிரபல கொரியன் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho வின் மற்றுமொரு படைப்பு இது.

IMDb 7.3

பல அருமையான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

உதாரணமாக மதர், மெமரிஸ் ஆஃப் தி மர்டர் சமீபத்தில் வெளிவந்த பாரசைட் ஆஸ்கர்களை வாங்கி குவித்தது

#tamilhollywoodrecommendations
#Tamil
இந்தத் திரைப்படம் இவருக்கு ஹாலிவுட் என்டிரி திரைப்படம் ஆகும். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்.

ஒரு 13 வயது இளம் பெண்ணிற்கும் அவள் வளர்க்கும் ஓக்ஜா என்ற பெரிய சைஸ் பன்றி போன்ற மிருகத்திற்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை பற்றிய கதை.
என்னுடைய பார்வையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.🔥🔥🔥🔥
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

Genetically Mutated பன்றிகளை ஒரு corporate கம்பெனி இறைச்சிக்காக உருவாக்குகிறது.

அதை சோதனை செய்ய கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் கொடுக்கின்றது.
Read 19 tweets
Contact - 1997

இந்த படம் ரொம்ப வருஷமா என் வாட்ச் லிஸ்ட்ல இருந்தது. இது ஒரு Sci Fi படம். 

Forrest Gump பட இயக்குனர் Robert Zemeckis ன் படம், ஹீரோயின் Jodie Foster , ஹீரோ Matthew McConaughey 

IMDb 7.5
தமிழ் டப் இல்லை. 

#tamilhollywoodrecommendations
#Tamil #scifi #aliens ImageImage
வேற கிரகத்தில் உயினங்கள் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் ஹீரோயின் பற்றிய படம். 

எல்லி ஒரு திறமையான விஞ்ஞானி. இவருடைய லட்சியம் மனிதர்களைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் உள்ளனவா அப்படி இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிப்பது.
இதற்காக சில தனியார் உதவியுடன் பெரிய பெரிய ரேடியோ டெலஸ்கோப் வைச்சு வானத்தில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா என்று ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குறாங்க. 

இதற்கு இடையில் அங்கு உள்ள மதம் சம்பந்தப்பட்ட படிப்பில் படிக்கும் Palmer உடன் பழக்கம் ஏற்படுகிறது.
Read 21 tweets
Investigation Thrillers

துப்பறியும் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவனா இருக்குமோ ? இவனா இருக்குமோ ? என சுத்தி விட்டு கடைசியில் எவனுமே இல்லனு புதுசா ஒருத்தனை காட்டுவாங்க. விறு விறுப்புக்கு பஞ்சமே இருக்காது. 
#tamilhollywoodrecommendations
#Tamil
#investigation
இல்லைனா நம்ம இவனா தான் இருக்கும்னு யோசிச்சு வச்சுருப்போம் அவன் தான் கொலைகாரன் என்பது போலவே காட்டி கடைசியில் ட்விஸ்ட் வைப்பார்கள். 

இன்னொரு ரகம் துப்பறியும் போலீஸ் பார்வையில் நகரும் படம். யாருக்குமே கொலைகாரனை தெரியாது.. போலீஸ் போலவே க்ளூவ வச்சு நாமளும் யோசிச்சுகிட்டு இருப்போம்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் குழந்தை கடத்தல் விசாரணை சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று படங்களையும் இணைத்து உள்ளேன்.

இன்னும் நிறைய நல்ல படங்கள் உள்ளன. இது நான் பார்த்த நல்ல படங்களின் ஒரு பகுதி மட்டுமே. So நீங்க இந்த படத்தை விட்டுட்டீங்கனு கம்பளெய்ன்ட் பண்ணாதீங்க.
#crime #Thriller
Read 30 tweets
[Documentary Series ] House Of Secrets - The Burari Deaths - 2021

1 Season , 3 Episode , 18+
Netflix - ல் தமிழில் உள்ளது.

2018- ல் டெல்லியில் ஒரு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரு நைட் தூக்குல தொங்கிட்டாங்க.
3 தலைமுறை ஒரே இரவில் அழிந்து விட்டது.
இறந்ததுல குறைஞ்ச வயது 14 வயது பையன் , அதிக வயசு 80 வயசு பாட்டி.
இதற்கு நடுவுல டீன் ஏஜ், 30+, 40+ னு ஒவ்வொரு குரூப்லயும் ஒண்ணு ரெண்டு பேர் இருப்பார்கள்

10 நாளைக்கு முன்னாடி தான் குடும்பத்துல ஒரு பொண்ணுக்கு அவ்வளவு சந்தோஷமா நிச்சயதார்த்தம் வைச்சு குடும்பத்தோடா கொண்டாடிருக்காங்க
இவ்வளவுக்கும் ஒரு சொட்டு இரத்தம் இல்லை, சண்டை எதுவும் நடந்த தடயம் இல்லை ஆனா 11 பேரும் இறந்து விட்டனர்.

என்ன நடந்தது ? யார் இதற்கு காரணம் ? கொலையா ? தற்கொலையா ? என அலசி ஆராய்கிறது இந்த டாக்குமெண்டரி சீரிஸ்.

கொலையை விசாரித்த போலீசார், தடயவியல் துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள்
Read 19 tweets
Richard Jewell - 2019

இத்திரைப்படம் 1996 நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

ஹாலிவுட்டின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவரான கிளின்ட் ஈஸ்ட்வுட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம்

IMDb 7.5
தமிழ் டப் இல்லை

#tamilhollywoodrecommendations
#Tamil ImageImage
ரிச்சர்ட் ஜுவல் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு வெகுளியான முன்னாள் காவல் அதிகாரி. அப்பா இல்லாத நிலையில் தனது அம்மா பாபியுடன் வசித்து வருகிறார். செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் அவர் 1986 வது வருடம் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில்
வெடிகுண்டு இருப்பதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறார்.

பத்திரிக்கைகள் மற்றும் காவல்துறையின் பொறுப்பின்மை காரணமாக அவர் தான் வெடிகுண்டு வைத்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றிச் சொல்கின்ற படம்.
Read 20 tweets
[Series] Spartacus - Season 1 - Blood and Sand

பண்டையகால ரோமப் பேரரசு ஆட்சியில் வாழ்ந்த ஸ்பார்ட்டகஸ் என்னும் வீரனின் வாழ்க்கையை பற்றிச் சொல்லும் தொடர்

IMDb 8.5
1st Season 13 Episodes

கண்டிப்பாக 18+ ( Too much violent & Sexual Content)

#tamilhollywoodrecommendations
#Tamil ImageImage
வன்முறை காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளுக்கு பெயர் போனது கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர்.

ஆனால் அது எல்லாம் ஜிஜீபி என்று சொல்லும் அளவிற்கு அந்த மாதிரியான காட்சிகள் தொடர் முழுவதும் உள்ளது.

முதல் சீசனில் ஸ்பார்ட்டகஸ் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஒரு சிறிய கிராமத்தில் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் ஸ்பார்ட்டகஸ்.

ஒரு கொடூரா ஆதிவாசிகள் கும்பலை அழிக்க ரோம் அரச படைத்தளபதி உடன் டீல் பேசுகிறார்கள் ஸ்பார்டகஸ் குரூப்

ஆனால் டீல் தவறாக போகும் போது ரோமுக்கு எதிராக திரும்புகிறான் . இதனால் பெரும் ரோம் படையால் சிறைபிடிக்கப்படுகிறான்.
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!