Discover and read the best of Twitter Threads about #யவனர்கள்

Most recents (5)

மதிப்புறு பண்டம்...!

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் அழகு மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன.

அதிலும் கூட கொங்கு நாட்டு அகழாய்வில் மிகுதியும் கிடைக்கின்றன.

#கொடுமணல் அகழாய்வில் ஓர் ஈமச்சின்னத்தில் 2500 மணிகள் வைத்திருந்தனர். 900 மணிகள், 800 மணிகள், 750 மணிகள், 600 மணிகள்
என எண்ணிக்கை மிகுந்த மணிகள் #கொடுமணல் ஈமச்சின்னங்களில் வைக்கப்பெற்றிருந்தன.

#கொடுமணல் வாழ்விடத்தில் இந்த அளவுக்கு எண்ணிக்கையில் மணிகள் கிடைக்கவில்லை.

அதனால் ஈமச்சின்னப் பொருள்கள் 'ஈகை அரிய நன்கலம்' (Prestigious Goods) என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
இதுபற்றி ஷெரீன் ரத்னாகர் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

மெசபடோமியாவில் இறந்தபின் புதைக்கும் போது, இதுபோன்ற மதிப்புமிகு பண்டங்களை வைத்துப் புதைத்தனர்.

தங்கள் கைவசம் அந்தப் பொருட்கள் இல்லையானாலும், மற்றவர்களிடமிருந்து பொருளைப் பறித்துக் கொண்டுவந்து ஈமக்குழியில் வைத்துப்புதைப்பர்.
Read 17 tweets
இலக்கியங்களில் கொற்கையும், வணிகச் சிறப்பும்...!

#தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் சங்க காலப் பாண்டியர்களின் இயற்கைத் துறைமுகம் #கொற்கை.

கொற்கைத் துறைமுகத்தில் முத்துக் குளித்தல் தொழிலும், முத்து ஏற்றுமதியும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. Image
செங்கடல் வழி நூலாசிரியர் இதை #கொல்சி என்று எழுதியுள்ளார்.

#கொற்கை தமிழகத்திலுள்ள #புகார், #மாமல்லபுரம், #தொண்டி, #உவரி, #முசிறி ஆகிய பிற துறைமுகங்களை விட மிக அழகு நிறைந்த துறைமுகமாகவும்;

கடற்கொள்ளையர்களால் தலைகாட்ட முடியாத நல்ல பாதுகாப்பான துறைமுகமாகவும்;
#உரோமர் நாட்டு மக்களை மிகவும் வசீகரித்த 'ஆணி முத்துக்களை' அளிக்கும் பட்டினமாகவும் இருந்தது.

மேலும் அயலவர்களை கொற்கை மக்களும், பாண்டிய பார்வேந்தர்களும் அன்புடன் வரவேற்றுப் போற்றி விருந்தோம்புபவர்களாக விளங்கினர் என்பர்.
Read 23 tweets
சங்க காலத்தில் கடல் வணிகமும், புலம்பெயர்வும்!

சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.

#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.
Read 15 tweets
சங்க காலத்தில் #பொற்றொழில்!

உலோகங்களில் உயர்ந்தது பொன். ஈரம், காற்று ஆகியவற்றால் ஒளி மங்குதல் இல்லாமையானும், அமிலம் போன்றவற்றில் கரையாத் தன்மையானும் #பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

பண்டைக் காலம் முதலே அறியப்பட்ட உலோகம் #பொன்.
இவ்வுலோகம் #பொன் என்றும் #பொலம் என்றும் இரு சொற்களால் சங்க இலக்கியங்களில் பயிலப்படுகிறது.

"யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" (அகம் 149:9,10)

▪︎ கறி - மிளகு

#யவனர் செய்த அழகு மிகு மரக்கலங்கள் #பொன் கொணர்ந்து இறக்கி, #மிளகு ஏற்றிச் செல்லும்.
'ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன' (அகம்- 364:4)

(சிவந்த பொன்னினால் ஆகிய அணிகலன்களைத் தொங்க விட்டாற் போல)

மேற்கண்ட அடிகளில் #பொன் என்னும் சொல் ஆட்சி பெற்றுள்ளது.

பொதுவாக #இரும்பு போன்ற உலோகங்களையும் #பொன் என்ற சொல்லால் குறிப்பிடுவதைச் சங்கப் பாடல்களில் காணலாம்.
Read 20 tweets
"சங்க இலக்கியங்களில் தமிழர்களின் கடல் வணிகம்...!"

தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர்.

இவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகளும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன!
சங்க இலக்கியங்களும் தமிழர்கள் வேறு நாட்டினரோடு கடல் வணிகம் கொண்டிருந்தனர் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் தருவதை பின்வருமாறு காணலாம்.

🔹நற்றிணைப் பாடலொன்றில் (295: 5, 6) பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழகத்தின் துறைமுகங்களுக்கு #நாவாய்கள் வந்தன என்பதை அறிய முடிகின்றது!
அக்காலத்தில் தமிழகத்தில் சிறப்புற்றிருந்த,

முத்தும், பவளமும்;
சங்கும், ஆரமும்;
அகிலும், மிளகும்;
வெண் துகிலும்,

பிற நாட்டினரின் மனதைக் குறிப்பாகக் #கிரேக்கர், #உரோமர் மனதை அதிகம் கவர்ந்தன.

இவர்களைத் தமிழ் இலக்கியம் #யவனர் என அழைக்கின்றது!
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!