Discover and read the best of Twitter Threads about #கொரோனா

Most recents (22)

ஒரு முஸ்லிம் தோழரின் மனதை பிழிந்த பதிவு...👇👇

நீங்கள் செய்யாததை நாங்கள் செய்தோமே தோழா அதைப்பற்றி திரைப்படம் எடு தோழா
#தி_இஸ்லாம்_ஸ்டோரி என்ற பெயரில் படம் எடு...

#சுனாமியில் உயிர் இழந்த சகோதர்களுக்கு நாங்கள் ஆற்றிய மனிதநேய பணியை பற்றி படம் எடு...

(1)... Image
#கஜா புயலால் ஏற்பட்ட இழப்பின்போது நம் மக்களுக்கு மதம் பாராமல் நாங்கள் ஓடி ஓடி ஆற்றிய பணிகளை படம் எடு...

#கடலூர்
#சென்னை ஆகிய நகரங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நீந்தி சென்று மக்களை காப்பாற்றினோமே
தாகத்திற்கு தண்ணீரும், உணவும் கொடுத்தோமே அதை பற்றியும் ஒரு படம் எடு...

(2)... Image
பேரிடர் காலங்களிலும், விபத்து நேரங்களிலும் #மசூதிகளை தங்கும் இடங்களாக மாற்றிக்கொடுத்தோமே அதைப்பற்றியும் படம் எடு..

#செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வீடுகள் மூழ்கினவே அப்போது நாங்கள் நீந்திச்சென்று செய்த நன்மைகளை விளக்கி பெரிதாக படம் எடு...

(3)... Image
Read 8 tweets
அன்பு உடன்பிறப்புகளே.........

இந்த பதிவை #முழுமையாகபடித்து முடிந்தவரை #பகிருங்கள். பாஜக அரசின்
போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம். அவர்களிடம் #முகநூலில் கருத்து #சன்டை போட #தேவையில்லை. சொன்னாலும் அவர்கள் போலி வரலாற்றையே கையிலெடுப்பர்.நாம் #மக்களிடம் இந்த #கேள்விகளை
#வைப்போம்...பதிலை அவர்கள் #தேர்தல் வாக்குகள் #மூலம் திருப்பி #தரட்டுமே....

இந்த பாஜக அரசு...

#எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

#ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது? பாஜக மீது கேள்வி கேட்கும் #நீதிபதிகளின் மீது மட்டுமே
#கற்பழிப்பு புகார்களும் #கொலைமிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?

#மோடியை பிரமோட் செய்ய பயன்படுத்தப்பட்ட #பத்தாயிரம்கோடி பணம் யாருடையது?

அத்தனை #ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் #பரிசுத்தமாவது எப்படி?

#எதிர்க்கட்சிகள் பாஜக
Read 15 tweets
#பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை வியர்வை கண்டித்து

#கொரோனா காலத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதை கண்டித்தும்…

#நாம்_தமிழர்_கட்சி - 1/4
கர்நாடகா மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை கண்டித்தும்…

#நாம்_தமிழர்_கட்சி - 2/4
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்படும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது…

#நாம்_தமிழர்_கட்சி - 3/4
Read 5 tweets
COVID 19 தடுப்பூசி போட்டால் எனக்கு #கொரோனா_வராதா ?
#வரலாம்! வாய்ப்புகள் உண்டு!
அப்புறம் ஏன் சார் நான் ஊசி போடணும் ??
இதை படியுங்கள்!
#கொரோனா பாதிக்கப்பட்ட 10000 நபர்களின் CT ஸ்கேன்ஐ பார்த்த பொழுது, ஏதேனும் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு, எத்தனை இணை நோய் (BP, Diabetes, obesity ) இருப்பினும் அவர்களின் நுரைஈரல் பாதிப்பு அதிக பட்சம் 5 -10 % மட்டுமே.
ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களே oxygen bed மற்றும் ICU அட்மிஷன் தேவைபடும் அளவிற்கு செல்கிறார்கள். தடுப்பூசி போட்ட ஒருவர் கூட oxygen தேவைபடும் அளவிற்கு பாதிக்கப்படவில்லை. Apollo மருத்துவமணியின் சமீபத்திய ஆய்வும் அதையே சொல்கிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுவே !
Read 7 tweets
#கொரோனா #வெண்டிலேட்டர் ட்ரிட்மெண்ட் விளக்கம்.

இது வெண்டிலேட்டரில் வைத்திருப்பது என்றால் என்ன என்று தெரியாதவர்கள், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் துணிச்சலாக புழங்குபவர்கள் மற்றும் பொதுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கான எச்சரிக்கை.
வெண்டிலட்டர் என்பது வாய்க்கு மேலாக ஒரு மாஸ்க்கை வைத்து ஆக்சிசன் கொடுத்து நோயாளியை சௌகரியமாக படுக்க வைத்து கையில் ஒரு தினப் பத்திரிகை கொடுத்து வசதியாக வைத்திருப்பது என்ற முட்டாள்தனமான கற்பனையை விட்டுவிடுங்கள்.
Covid-19 நோய்க்கான வெண்டிலேட்டர் என்பது ஒரு வலிமிகுந்த சிகிச்சை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு நீளமான குழாயை தொண்டை வழியாக செலுத்தி அதன் மூலம் நுரையீரலுக்கு ஆக்சிசன் செலுத்துவார்கள். இது நீங்கள் உயிரோடு இருக்கும் வரை அல்லது இறக்கும்வரை நடைபெறும்.
Read 10 tweets
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17 Image
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
Read 17 tweets
அண்ணன் @PKSekarbabu

கழக தலைமையால் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஏழாம் ஆண்டின் தொடக்கம்!

2016-சட்டமன்ற பொது தேர்தலில் மாவட்டத்திற்குட்பட்ட 6 தொகுதிகளில் 5ல் வெற்றி, 2019-நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகளில் வெற்றி !! Image
துறைமுகம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராய் செவ்வனே பணியாற்றிக்கொண்டு ஆண்டுகள் தவறாமல் மாவட்டம் முழுவதிலும் தலைவர் கலைஞர் பிறந்தநாள், தலைவர் அண்ணன் தளபதியார் பிறந்தநாள், இனமான பேராசிரியப் பெருந்தகை பிறந்தநாள், முப்பெரும் விழா, தமிழ்ப்புத்தாண்டு, கிறித்துமஸ், ரம்ஜான் என மக்களுக்கு
பற்பல நலத்திட்ட உதவிகள் !!

2015 வெள்ள பாதிப்பின்போதும், வர்தா புயல் சேதத்தின்போதும் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மின்னல் வேக நிவாரண உதவிகள் !!

#கொரோனா பாதிப்பின் போதும் தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் தலைவரின் ஆணைப்படி மாவட்டம் முழுவதும் இன்று வரை சுற்றிச் சுழன்று மக்களை
Read 4 tweets
#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
Read 15 tweets
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 2516

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 35 பேர் பலி

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3859

தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கை 72,433
#CoronaVirus #COVID19 #TNFightsCorona
இன்று பிசிஆர் சோதனைக்குள்ளானோரின் எண்ணிக்கை 71,147 பேர்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 11,018 பேர் பலியாகியுள்ளனர்

#TNCoronaUpdates #கொரோனா
சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டோர் எண்ணிக்கை 688 பேர்

தமிழகத்திலேயே அதிக பட்சமாக இன்று சென்னையில் 9 பேர் மரணம்

கோவையில் 7 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்குப் பலி

செங்கல்பட்டு 2 , கடலூர், காஞ்சிபுரம், கரூர் தலா ஒருவர் பலி
Read 4 tweets
#நீட்தேர்வு தந்த மன அழுத்தத்தில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தும், எங்கே தன்/பெற்றோர் கனவுகள் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் தற்கொலை முடிவெடுத்த தங்கை #ஜோதிஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ.

இந்த #கொரோனா காலத்தில் எல்லா தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1/3
#BanNEET_SaveTNStudents
ஆனால் #நீட்தேர்வு க்காகவே ஊரடங்கை தளர்த்தியது போல கடந்த செப்1ல் தளர்வு, செப் 7 முதல் பொதுபோக்குவரத்து அனுமதித்து, நீட்தேர்வு நாளை (செப்.13) நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மத்தியஅரசின் உத்தரவுக்கு ஏற்ப தயார்செய்தது மாநில #அதிமுக #பழனிசாமி அரசு. இல்லையென்று 2/3
#BanNEET_SaveTNStudents
மறுக்குமாயின், தமிழக மாணவர்களுக்கு #நீட்தேர்வு நடத்த முடியாது என்று அமைச்சசரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து, தமிழகஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 #மருத்துவகல்லூரி களுக்கு 12 தேர்வுமதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும்.3/3
#BanNEET_SaveTNStudents
Read 3 tweets
ஆடி மாசம் முழுக்க #மாரியம்மன் எனும் மழைத் தெய்வத்திற்கான கூழ் வார்த்தல் திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கிராமங்களில் நடத்தப்படுகிறது. அது இந்த ஆண்டு #கொரோனா விற்காக நிறுத்தப்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் பொங்கவில்லை.

மதுரையின் பிரசித்தி பெற்ற #சித்திரைத்திருவிழா 1/5 Image
நிறுத்தப்பட்ட போது, #இந்துமுன்னணி யினர் பொங்கவில்லை.

ஆனால் தமிழ் மண்ணுக்கு பாரம்பரிய தொடர்பில்லாத விநாயகனின் ஊர்வலத்தை நிறுத்த சொல்லும்போது மட்டும் இந்து முன்னணி பதறுகிறது. இந்துக்களுக்கு ஊர்வலம் நடத்த உரிமையில்லையா என கொக்கரிக்கிறது.

ஏனென்றால் இந்து முன்னணி காரனுங்களைப் 2/5
பொறுத்தவரைக்கும் ராமனும், விநாயகனும் ஆன்மீக அடையாளங்கள் அல்ல. அவை அரசியல் கருவிகள். ராமனையும், விநாயகனையும் வைத்து கலவரம் செய்து கட்சி வளர்த்ததுதான் அவர்களின் வரலாறு.

மாரியம்மன்கள் இந்து முன்னணி வலியுறுத்தும் பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரானதாக இருக்கின்றன. அது உழைக்கும் 3/5
Read 5 tweets
2009-ல் #தமிழீழ மண்ணில் உச்சகட்ட போர் நடந்துகொண்டிருந்தபோது!!

அப்போதைய காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி ! சிங்கள இனவெறி இராணுவத்துக்கு இந்திய அரசு செய்துகொண்டிருந்த ஆயுத உதவிகளை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்றுங்கள் + Image
என்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து தமிழ் உணர்வாளர்கள். அழுகையும் ஆத்திரமுமாக தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் வேண்டுகோள்கள் வைத்த வண்ணம் இருந்த நாட்கள் அவை.

தமிழகத்தில் அப்போது உருவான தன்னெழுச்சியை, கிளர்ச்சியை கட்டுப்படுத்தவும்,
மட்டுப்படுத்தவும் #கருணாநிதி +
தலைமையிலான திமுக அரசு, வாரம் இரண்டு முறை பிரணாப் முகர்ஜி மற்றும் சிவசங்கர மேனன் இருவரையும் மாறி மாறி தமிழகம் அழைப்பார்கள். அடுத்தநாள் காலையில் அனைத்து ஊடகங்களிலும் #தலைப்பு செய்திகளில் "தமிழர்கள் உயிரை உடனே காப்பாற்ற கருணாநிதி கோரிக்கை" "போரை நிறுத்தாவிட்டால் +
Read 10 tweets
#அமித்ஷா'வுக்கு கொரோனா பாசிட்டிவ் அப்படிங்கிற செய்திக்கு 'ஹா ஹா' ரியாக்ட் பண்றதை விட கேவலம் இருக்கமுடியாது...

அந்தாளு நல்ல மனுஷனோ, கெட்டவனோ, யோக்கியனோ இல்லையோ அது வேற விஷயம். ஒருத்தர் நோய்வாய்ப்பட்டதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? இதே போல தான், திமுக MLA #அன்பழகன் இறந்தப்போ

1/N Image
சங்கீஸ் கொண்டாடினதும், அதிமுக அமைச்சர் #செல்லூர் #ராஜு'வுக்கு கொரோனா வந்தப்போ மீம்ஸ் போட்டதும்.

ஒரு மனுஷனை திட்டலாம், விமர்சனம் பண்ணலாம், கேலி பண்ணலாம். ஆனா, நோயையும் மரணத்தையும் கேலி பண்றது என்ன மனநிலை?

நீங்க ஏதோவொரு கட்சிக்கு ஆதரவா இருக்குற ஒரே காரணத்துக்காக, உங்க

2/N
வீட்டுல யாருக்கு #கொரோனா வந்துச்சுன்னு வேற ஏதோ கட்சிக்காரர் சிரிச்சு கொண்டாடினா அதுவும் இப்படித்தானே இருக்கும்?

ஒரு காலத்துல, நானும் இப்படி சிரிச்சிருக்கேன்... வடநாட்டுல ஒரு தலைவர் இறந்தப்போ கொண்டாடி இருக்கேன்.. ஆனா, அதுவே ஒரு sadist மனநிலைன்னு புரிஞ்சு வெளியே வந்துட்டேன்.

3/N
Read 6 tweets
நடுவன் அரசு புதிய கல்வி திட்ட வரைவை ஏற்றுக் கொண்டுள்ளது. #கொரோனா தொற்றுக்காலத்தில் பல அவசரச் சட்டங்களை நிறைவேற்றும் முன்னெடுப்பைத்தான் இதில் நாம்காணமுடிகிறது.
1. தற்போது தமிழகத்தில் உள்ள கல்விமுறையே, அதாவது +2 (12) வகுப்புவரைஎன்பது நல்லபடியாகத் தான் உள்ளது. 1/
#TNRejectsNEP2020
அது இனிமேல் மாறும். அதாவது  5 + 3 + 3 + 4 என்றுவர இருக்கின்றது. இதனால், 3 வயதிலிருந்தே குழந்தைகள் கல்வி கற்க நிர்பந்தப்படுத்தப்படுவார்கள். விளையாடும் குழந்தைக்கு படிப்பு & தேர்வு என வர உள்ளது. 3 வயது குழந்தைக்கு படிப்பு எதற்கு என நாம் முதலிலேயே எதிர்த்தோம். 5 வகுப்பிற்கு 2/
பொதுதேர்விற்கே கண்டனம் தெரிவித்த நாம் இதற்கு என்ன செய்யப் போகின்றோம்?
2. 5-ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு வரை தாய்மொழி/மாநில மொழியில் கல்வி கட்டாயம். இது வரவேற்கபடவேண்டியது. ஆனால், அதை கொண்டாட முடியாமல், மீண்டும் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது இந்த புதிய கல்வி முறை. 3/
Read 15 tweets
Read 3 tweets
#சங்கி & #தமிழன்

இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்!

ஆமாம். வாங்க போய் #பெட்ரோல் #டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப. பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு #விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடிக்கு மறுக்கும் #பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மாணவர்களின் #கல்விக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய பாஜக எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா #நிவாரணநிதி க்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய #கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப வாங்க. தமிழகத்திற்கு சேர வேண்டிய #GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. மருத்துவப் படிப்பில் OBC #இடஒதுக்கீடு கொடுக்க +
Read 8 tweets
#கொரோனா
சைனா ல இருக்கு,
இந்தியாவுக்கு வந்துருச்சு,
தமிழ்நாட்ல பரவ ஆரம்பிச்சிடுச்சு,
சென்னைய Lockdown பண்றாங்களாம்,
Positive Rate அதிகமாகுது,
அப்படி இப்படி ன்னு ஒரு News ஆ , வெறும் Numbers ஆ, கொஞ்சம் Cautious வோட கடந்து போய்கிட்டு இருந்தோம்..! Image
திடீரென்னு இன்னைக்கு காலைல பக்கத்து வீட்ல உள்ளவங்களுக்கு கொரோணா பாசிட்டிவ் ன்னு சொல்லி கார்ப்பரேஷன் ல இருந்து வந்து ஸ்டிக்கர் ஒட்டி,
கிருமிநாசினி,Sanitizer எல்லாம் தெளிச்சுட்டு போய்ட்டாங்க (நம்ம வீட்டுக்கும் சேர்த்து தான்)
அவங்க போகும்போது
உங்க வீட்ல எத்தனை பேருன்னு கேட்டுட்டு, Image
"நீங்களும் ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க.. " அப்படின்னு சொல்லிட்டு போகும் போது அடிவயிற்றில் Lite ஆ புளியை கரைக்க ஆரம்பிச்சிருந்தது..!😕 Image
Read 4 tweets
முட்டாள் அரசாங்கம் @CMOTamilNadu👇

நாளுக்கு நாள் #கொரோனா பாதிப்பு நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்கும் அறிகுறிகளே அரசின் நடவடிக்கை காட்டுகிறது.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் #10thPublicExam அறிவிப்பை முட்டாள் அரசு அறிவித்திருக்கிறது (1/4) Image
9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு தேர்வெழுத உள்ளனர்.

இதில், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருபவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

இவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
எத்தனை பேரிடம் இதுகுறித்து கலந்தாலோசித்தார்கள்? மாணவர்கள் கருத்து கேட்கப்பட்டதா? (2/4)
ஆசிரியர்கள் கருத்து கேட்கப்பட்டதா?

முதலில் பள்ளிக் கல்விக்கு என ஒரு அமைச்சர் @KASengottaiyan இருந்தாரே, நல்லா இருக்காரா? உடம்புக்கு ஏதும் பிரச்னை இல்லையே?

வெட்கப்பட வேண்டும். 10 லட்சம் மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை. தெளிவான அறிக்கை, தெளிவான திட்டத்தை சொல்லியிருக்கிறாரா? (3/4)
Read 5 tweets
அன்புள்ள ஊடகங்களுக்கு, #கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, ஊரடங்கு அறிவிப்பு வந்த நாள் முதல் நீங்கள் நடத்தும் விவாதங்களில் பங்கேற்று பேசுவது, #அதிமுக & அதன் தோழமைகட்சிகள் (தமாகா,பாமக), #திமுக & அதன் தோழமைகட்சிகள் (காங்கிரஸ், கம்யுனிஸ்ட், விசிக), நடுநிலையாளர்கள் என்று தேர்ந்தெடுத்த 1/1
சிலர், வலதுசாரி சிந்தனையாளர்கள், சில சமயங்களில் பொருளாதார நிபுணர்கள் என வழக்கமாக பங்கேற்கின்றனர். ஆட்சி என்பதனால் #அதிமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர், எதிர்கட்சி என்பதனால் #திமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர் என நான்கு பேர் 2/2
கட்டாயமாக அனைத்து விவாதங்களிலும் இடம் பெறுகின்றனர். ஏன் மற்ற கட்சிகள் இல்லையா? தேர்தல் கூட்டணி என வைத்துக் கொண்டால், அவர்களைத் தவிர, அவர்களுடன் கூட்டணி வைக்காமல், அரசுகள் செய்யும் தவறுகளை தொடர்ந்து தட்டிக் கேட்கும் @maiamofficial கட்சியோ, அல்லது #நாம்தமிழர்கட்சி யோ 3/3
Read 11 tweets
இந்நேரத்தில் பேசக்கூடாது என்றில்லை பேசனும், அந்த அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்!

வரி வருவாய் இன்றி கடுமையான பாதிப்பில் தமிழகம் தள்ளாடி வருகிறது. பிரதமரிடம் முதலமைச்சர் @CMOTamilNadu 12 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்டார். ஆனால், முதற்கட்டமாக கொடுத்தது வெறும் 500 கோடி (1/4)
டாஸ்மாக், பெட்ரோலியம், முத்திரைத்தாள் & பதிவுக்கட்டணம் மூலம் ஆண்டுக்கு 1.2லட்சம் கோடிக்கு வருவாய் கிடைக்கிறது.

டாஸ்மாக் மூலம் மாதத்துக்கு 3000 கோடி, முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் மூலம் 1200 கோடி என வருவாய் வருகிறது!

ஆனால், இவையெல்லாம் #கொரோனா -வால் முடங்கிக் கிடக்கிறது (2/4)
இந்நிலையில் கடந்த நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரம் கோடி அளவிலும், திருத்திய மதிப்பீட்டில் 25 ஆயிரம் கோடி அளவிலும் உயர்ந்துள்ளது.

தற்போதே வருவாய் தரக்கூடும் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் நிலையில் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வருவாய் வறட்சியை சந்திக்கபோகிறது (3/4)
Read 5 tweets
#கொரோனா கொடுத்த படிப்பினை...

எதை எதை எல்லாம் அவர்கள் மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுதான் இந்து தர்மம்.

இந்து சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல் நெறி.

1
இந்து சமயத்தின் வழிபாட்டு முறைகளை மூட நம்பிக்கை எனக் கூறுகிறார்கள் பகுத்தறிவு வாதிகள்.

எதை எதை எல்லாம் அவர்கள் மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுதான் இந்து தர்மம்.

2
அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா.

கொரோனாவினால் அதிக உயிர்கள் பலியானது சீனாவில். இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென் கொரியா வும் உள்ளன.

3
Read 23 tweets
கொரோனா தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சலும் வறட்டு இருமலும்(சளி அற்ற) ஏற்படும். நாளடைவில் வறட்டு இருமல் சளியுடன் கூடிய இருமலாக வரும். முதலில் வருவது காய்ச்சலா அல்லது வறட்டு இருமலா என்பது பற்றிய சரியான புரிதல் யாருக்கும் இல்லை. - P1
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கொரோனா வைரசு காற்றின் மூலம் பரவாது. தொடுதலின் மூலமே அதிகமாக பரவும். உடலினுள் வைரஸ் சென்றதுமே அது பெருக ஆரம்பிக்கும். சளி மூலம் ஒருவரிடம் இருந்து வெளியே வந்த வைரஸ் சூழலில் பல்கிப் பெருகாது- P2
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக பயணிக்க வேண்டும்.

தூரமாக நின்று கதைப்பதன் மூலமே தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
- P3 #Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
Read 38 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!